2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

தீ பற்றிய மோட்டார் சைக்கிள் இருவர் தப்பினர்

Editorial   / 2024 மார்ச் 09 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பெட்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி, வெள்ளிக்கிழமை (08) மாலை    இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குறித்த சம்பவம்   யாழ் -மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.

தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை யானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .