2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

திருமுறுகாண்டிக் குளத்தைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

ஜனாதிபதியின் சௌபாக்கிய கொள்கையின் கீழ், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்  நீர்ப்பாசன செழிப்பு எனும் 5,000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்டத்தில், 78 குளங்கள் புனரமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்குட்பட்ட திருமுறுகாண்டிக்குளத்தைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதன் அங்குராப்பண  நிகழ்வு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத் தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத
 தலைவருமான காதர் மஸ்தான்  தலைமையில், நேற்று (07)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்காக, ஆறு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .