2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தடையையும் மீறி கிளிநொச்சியில் பேரணி

Niroshini   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான  மாபெரும் பேரணியானது, இன்று
(07) காலை, கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பித்து, பொலிகண்டி
நோக்கி பயணித்தது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் போராட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள்,  வாகன ஊர்வலம் என எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ள போதும், இன்று பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில்  வைத்து, வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பயங்கரவாத  தடைச் சட்டத்தின் கீழ்
கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் போராட்டத்தை முன்னெடுத்து,  பின்னர் பேரணியில் கலந்துகொண்டனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .