Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரண்டு வணிகநிலையங்களில் பொதுமக்கள் தவறவிட்ட பெறுமதியான தங்க நகைகளை உரியவர்களிடம் கையளித்த இரண்டு வணிகர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு தீன்சுவை வெதுப்பகதில் பொருட்கள் வாங்கிய போது ஆறரை பவுண் நிறையுடைய தாலிக்கொடியினை தவற விட்ட நிலையில் அதனை கண்டெடுத்த தீன்சுவை வெதுப்பகத்தில் முகமையாளராக பணியாற்றும் இ.செந்தில்நாதன் கண்டெடுத்து புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தின் தலைவர் த.நவநீதனுக்கு தெரியப்படுத்தி அந்த ஆறு பவுண் தாலிக்கொடியினையும் தவறவிட்ட உரிமையாளரிடம் கையளித்துள்ளார்
அதுபோன்று புதுக்குடியிருப்பு மருதம்.வாணிபத்தின் உரிமையாளர் யோ.மனோதாஸ் ( ஐயா) தனது வர்த்தக நிலையத்தில் ஒரு கைசெயின் ஒன்றினை (முக்காப்பவுண்)கண்டெடுத்து மூன்றுநாட்களாக முகநூல்வழியாகவும் வேறு வழிகளிலும் தகவலை பகிர்ந்து கைச்செயினை தவற விட்ட உரிமையாளரை இனம் கண்டு அடையாளத்தை உறுதிப்படுத்தி உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆ.டீ.சு கேரத் தாய்த்தமிழ்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சமாதான நீதவான் த.நவநீதன் , நேசக்கரங்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் ச.குகநேசன் மற்றும் தங்கநகைகளை தவறவிட்ட உரிமையாளர்கள் ஒண்றினைந்து இவர்களை கௌரவித்து நினைவு பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளார்கள்.
தாய்த்தமிழ்பேரவையின் ஒழுங்கமைப்பில் அமரர் புஸ்பராசா நற்பணி மன்றம் , மற்றும் வனிதா .ஜெயகாந்தன் அறக்கட்டளை ஆகிய சமூக அமைப்புகளின் நிதி அனுசரனையில் நேர்மைமிக்க மனிதாபிமான இரண்டு நற்பண்பாளர்களும் மதிப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago