2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சுமந்திரனின் வாகனம் விபத்தில் சிக்கியது

Freelancer   / 2024 ஜூலை 28 , மு.ப. 10:35 - 0     - 137

 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த வாகனம் சனிக்கிழமை (27) மாலை மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம், கிளிநொச்சி 155 கிலோ மீற்றர் தூண் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன்  மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், எம்.பி.யின் வாகனத்தின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X