Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் கூண்டில் நிறுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் எங்களுக்கான தீர்வு என்ன என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.
இன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போராட்டக்காரர்களால் விரட்டப்பட்டு, நாடு நாடாக அலைமோதும் அவருக்கு எங்கள் வலி இப்போது தெரியும். எங்களை கதற கதற பிரதேசம் பிரதேசமாக கலைக்கப்பட்டவர் தன் நாட்டில் தனது இனத்தினால் கலைக்கப்பட்ட நிலையில் அவர் சிங்கப்பூரில் வசிக்கின்றார்.
நாங்கள் பட்ட வேதனையினை விட அதிக வேதனை பட்டுக்கொண்டிருக்கின்றார். தன் இனத்திற்கு சொல்லி ஆறுவதற்கு கூட இடம் மில்லாத அளவிற்கு போயுள்ளார். பிரச்சினைகள் எல்லாம் அவர் பக்கம் திரும்பியுள்ளது என்றால் தமிழ் இனத்திற்கு செய்த அட்டூழியங்கள்.
எந்த அரசு வந்தாலும் எங்களுக்கான தீர்வு கிடைக்காது. கலைக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அவரை சர்வதேச கூண்டில் ஏற்றி எங்களுக்கான நீதி பெறவேண்டும். எங்களுக்கான நீதி தேவை எமக்கான நீதி கிடைக்கும்மட்டு தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாக போராடி வருகின்றேம். கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி இரண்டாயிரம் நாட்களை கடக்கின்ற.து அன்று இதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து உறவுகளும் எங்களுக்கான நீதியினை பெறுவதற்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago