Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் 15.04.2023 இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் 16.04.2023 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இன்று (17) பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டபோது குறித்த வீரர் மாரடைப்பு காணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago
5 hours ago