Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட முயன்ற
யாழ்.சங்கானை பகுதியை சேர்ந்த ஐவர் மற்றும் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியை
சேர்ந்த ஒருவர் உட்பட அறுவரை பிடித்த பிரதேச இளைஞர்கள் அவர்களை நையப்புடைத்து
பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை, வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்றபோது, உரிமையாளர்
எழுந்து சத்தமிட்டதையடுத்து, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அதிகாலை 2.30 மணி முதல் காலை 6.00 மணிவரை 8 ஆம் வட்டார இளைஞர்களுடன்
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் ஏனைய கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களும் தேடுதல்
நடத்தியபோது மூன்று திருடர்கள் மந்துவில் பகுதியில் வைத்து இளைஞர்களால் மடக்கிபிடித்து
கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து கத்தி, கோடரி போன்ற கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்ட நிலையில்
கொள்ளையர்களை வீதியில் இழுத்து வைத்து நையப்புடைத்துவிட்டு புதுக்குடியிருப்பு
பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (30) ஆஜர்ப்படுத்துவதற்கு
நடவடிக்கை எடுத்துள்ள புதுக்குடியிருப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago