Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 22 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக, செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்று அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இடம் பெற்றிருந்தது. இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டன.
இலக்க தகடுகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும். தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும் . எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் இந்த மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக விஷேட ஸ்கான் சோதனை நடைபெறும்.
களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே குறித்த ஸ்கேன் இயந்திரத்தினை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
2 hours ago
3 hours ago