Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Niroshini / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
குருந்தூர் மலை பகுதியில், மக்களது பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த 18ஆம் திகதியன்று, தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில், அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து, சுமார் ஒரு வார காலப்பகுதியில், குறித்த பகுதிக்கு வருகை தந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் இராணுவத்தினரையும் இணைத்து அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்கின்றவர்கள் தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த குருந்தூர் மலை பகுதியிலே, இலிங்க வழிபாடுகள் பெற்றமைக்கான பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக குறித்த பகுதியில் பல மூத்தவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் முகமாக, குருந்தூர்மலைப்பகுதியில் இடம்பெறும் அகழ்வாராய்ச்சி பணிகளின் போது, ஆதி லிங்கம் என கருதப்படும் லிங்க உருவத்தை ஒத்த சிலை ஒன்று வெளி தோன்றியுள்ளது.
குறித்த குருந்தூர் மலை பகுதியில் இடம்பெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்த போதும், குறித்த புகைப்படங்கள் முகநூலில் வெளியாகி வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago