Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள், அரசாங்க ஆதரவு உடையவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்குள் எமது உறவுகள் அகப்பட வேண்டாம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவர் மரியசுரேஸ் ஈஸ்வரி, செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றை நேற்று (18) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்தியிருந்தனர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவித்ததாவது:
திங்கட்கிழமை (19), செவ்வாய்க்கிழமை(20) ஆகிய நாள்களில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தால், மக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அத்துடன், அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள், அரசாங்க ஆதரவு உடையவர்களின் வேலை வாய்ப்பையும் அவர்களுடைய வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அத்துடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தொடர்பிலும் இங்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
54 minute ago
57 minute ago
1 hours ago