2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஐயன்கன்குளத்தில் இயங்காத சந்தை

Freelancer   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, ஐயன்கன்குளம் பொதுச் சந்தை இயங்காத நிலையில் காணப்படுகின்றது.

2012ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட இச்சந்தை இதுவரை இயங்காததன் காரணமாக, கட்டடம் கால்நடைகளின் உறைவிடமாக மாறியுள்ளது. 210 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற ஐயன்கன்குளத்தில், துணுக்காய் பிரதேச சபையால் அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடம், அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், இக்கிராமத்தில் சந்தையை இயக்குவதற்கான முயற்சிகளை, துணுக்காய் பிரதேச சபை மேற்கொள்ளவில்லை. இக்கிராமத்தின் மீன் வியாபாரிகள், தமக்கு விரும்பிய இடங்களில் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதை ஒழுங்குபடுத்த வேண்டியது பிரதேச சபை. ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சந்தைக்காக அமைக்கப்பட்ட கட்டடம் பயனற்றதாகவே காணப்படுகின்றது. 

இதேபோன்றே, கோட்டைக்கட்டியகுளம் கிராமத்தில் சந்தைக்காக அமைக்கப்பட்ட கட்டடம் நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ளது. பிரதேச சபை கட்டடங்களில் கட்டுவதில் அக்கறை செலுத்துகின்றதே தவிர, அதனை மக்கள் பயன்பாட்டுக்காக மாற்றுவதற்கான எந்தவிதமான திட்டங்களும் நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக பொது
அமைப்புகளால் முன்வைக்கப்படுகின்றன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X