2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

“என்னை தேட வேண்டாம்” தந்தைக்கு 12 வயது சிறுமி கடிதம்

Freelancer   / 2022 ஜூன் 06 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற சிறுமி அதிகாலையில் வீட்டில் இல்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த பணம், தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ள நிலையில், “தன்னை தேடவேண்டாம்” என கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த சிறுமி, டிக்டொக் மூலம் ஹட்டன் பகுதியினை சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளதாகவும், இதன்படி  காதலனை தேடி சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை சிறுமியின் தொடர்பு ஒருதடவை கிடைத்துள்ளதாகவும், மேற்கொண்டு தொடர்பு கிடைக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X