Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 16, புதன்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
இலங்கை நாட்டின் தமிழர் தரப்பின் தனித்துவமான பல்துறைசார் கலைஞர்கள், இலக்கியவாதிகள்,படைப்பாளிகளை உள்ளடக்கியதான தேசியக் கட்டமைப்பான ஈழத்துக் கலை இலக்கியப் பேரவை” எனும் கட்டமைப்பின் முதலாவது தெரிவுக்கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் வியாழக்கிழமை (12) பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது .
தலைமை ஒருங்கிணைப்பாளராக வன்னியூர் செந்தூரன், பொதுச் செயலாளராக பிரபல ஆசிரியரும்,படைப்பாளியுமான சி.வரதராஜன் நிதிச்
செயலாளராக பிரபல இசையமைப்பாளர் “தேனிசை இளவல்” பி.எஸ்.விமல்ராஜ், உப செயலாளராக படைப்பாளி கங்கா, ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்கள்.
மேலும் இவ் அமைப்பின் இயங்குதளத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்க சபையாகிய பிரதான ஆலோசனை சபையின் தலைவராக மூத்த இலக்கியவாதி –கலாநிதி “தமிழ்மணி” அகளங்கன், பிரதான ஆலோசனை சபை உறுப்பினர்களாக பேராசிரியர் கந்தையா-ஸ்ரீகணேசன், அதிபர் திருவாளர் விக்கினராஜா தெரிவானார்கள்.
அமைப்பின் நிர்வாக ஒழுங்குபடுத்தலான பொதுச்சபையின் உறுப்பினர்களாக பிரபல பாடகியும் தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளரும், ஈழத்தின் இசைக்குயில்” செல்வி கில்மிசா, கிரி கலையகத்தின் இயக்குனரும்,பிரபல தொழிலதிபருமான செ.சிவகிரி, படைப்பாளி பாபு, படைப்பாளி மணிபுரம் சிவா,
ஆசிரியரும்,படைப்பாளியுமான பாமா ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
துணைப்பிரிவுகளாக இலக்கியத்துறை சார் தலைவராக படைப்பாளி வன்னியூர் வரன் அவர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பிரிவுத் தலைவராக “கலைச்செல்வன்” ஆர்.யூ.எஸ் .பாலா, பாரம்பரியக் கூத்துக்கலைப்பிரிவின் தலைவராக
அண்ணாவியார் தவேந்திரன், விளையாட்டுத்துறைத் தலைவராக விளையாட்டு வீராங்கனை செல்வி பிரார்த்தனா தெரிவானார்கள்.
ஈழத்தின் சகலதுறைசார் கலை கலாசாரக் கட்டுமானங்களையும் ஒரே தளத்தில் ஒன்றாக்கி,நீண்டதிட்டமிடலுடன்,தூ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
54 minute ago
3 hours ago
4 hours ago