2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

இளம் குடும்பஸ்தர் கொலை; தந்தை, மகன் உட்பட ஆறு பேர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் ரஞ்சா என்று அழைக்கப்பட்ட 30 வயதான  இளம் குடும்பஸ்த்தர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறுபேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரு தினங்களிற்கு முன்பு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டும் வாளால் தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தந்தை ,மகன் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தாக்குதலிற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இடியன் துப்பாக்கி மற்றும் வாள்களும் மீட்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X