2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு கடத்தப்பட்ட ஒரு தொகை மஞ்சள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

36 பாரிய மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சளை இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

இதில், ​​பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மஞ்சள் மேலதிக விசாரணைகளுக்காக ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.(R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .