Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 16 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - முருகானந்தா கல்லூரிக்கு ஒரு ஆளுமையான அதிபரை நியமித்து, தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்குமாறு பெற்றோர்கள், பழைய மணவர்கள், பொது அமைப்புக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முதல் நிலை பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற கிளி. முருகானந்தா கல்லூரிக்கு பொருத்தமான அதிபரை நியமிக்காத நிலையில் தற்போது கல்வியில் பின்தங்கி காணப்படுகின்றது.
அத்துடன் பாடசாலையில் இருந்து பெருமளவான சொத்துக்கள் காணாமல் போயுள்ளன.
குறித்த பாடசாலையினுடைய வளர்ச்சி கருதி தற்போதுள்ள ஆளுமையற்ற அதிபரை இடமாற்றி ஆளுமையுள்ள ஒரு அதிபரை பாடசாலைக்கு நியமிக்க கோரியும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என 25இற்கும் மேற்பட்டோர் நேற்றிரவு (15-09-2022) சந்தித்து கலந்துரையாடி மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .