Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூன் 02 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இன்று வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை சந்திப்பதற்கான தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சுயநல அரசியலை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில் முறைகளையும் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக, கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மறுதினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டினை மாற்றியிருந்தமை தொடர்பாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago