Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 13 , மு.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களில் 37 குடும்பங்களுக்கு வீடும் இல்லை காணியும் இல்லாத நிலை காணப்படுவதாக கிராம அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
தேராவில் கிராமத்தில் 347 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பலர் திருமணம் செய்துகுடும்பங்களாக பதிவினை மேற்கொண்டு வந்துள்ளார்கள். இவ்வாறு கைக்குழந்தைகளுடன் வீடும் இல்லாதநிலையில் பெற்றோர்களின் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சிறு கொட்டகைகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு காணியும் இல்லாத நிலையில் வீடும் இல்லாத நிலையில் 37 குடும்பங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த குடும்பங்களுக்கான காணிகளையும் வீட்டுத்திட்டங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என கிராம மட்ட அமைப்புக்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago