Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 02 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாஸ்கரன்
கிளிநொச்சி - முட்கொம்பன் பிரதேசத்தில் உள்ள முதியோர்கள் தமக்கான முதியோர் கொடுப்பனவான 1,900 ரூபாவினை பெறுவதற்கு, போக்குவரத்துக்கு 2,000 ரூபாய் முதல் 2,400 ரூபாவினை செலவிட வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர் .
கிளிநொச்சி - பூனகரி பிரதேசத்தில் பின்தங்கிய பகுதியாக காணப்படும் முட்கொம்பன் கிராமத்துக்கான போக்குவரத்து வசதியின்மை மற்றும் வீதிகள் புனரமைக்கப்படாமை காரணமாக கிராம மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த முதியவர்கள் தமக்கான முதியோர் கொடுப்பனவர்களை கடந்த காலங்களில் புனகரி நல்லுார் உப தபாலகத்தில் பெற்று வந்தனர்.
தற்போது முதியோருக்கான கொடுப்பனவுகள் சமுத்தி வங்கியூடாக வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இக் கொடுப்பனவுகளை பெறுவதற்கு முக்கொம்பன் கிராமத்திலிருந்து வாடியடியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதற்கான போக்குவரத்துச் செலவாக 2,000 முதல் 2,400 ரூபா வரை செலவிட வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து வசதியின்மை காரணமாக முச்சக்கர வண்டிகளில் செல்லும் போது மேற்படி பணத்தினை செலவிட வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .