Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2023 டிசெம்பர் 15 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹேமாஸ் அவுட்ரீச் மையம் (HOF), லண்டனில் இயங்கும் இலங்கையின் உணவுக் குழுமமான ‘Hoppers London’உடன் கைகோர்த்து, "Feed the Future"எனும் தமது திட்டத்தை நீடித்து, தெரிவு செய்யப்பட்ட பியவர முன்பள்ளிகளில் காணப்படும் மந்தபோஷணையான சிறுவர்களின் போஷாக்கு தேவைகளை நிவர்த்தி செய்ய முன்வந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் இந்த பங்காண்மை ஏற்படுத்தப்பட்டதுடன், 2023 ஆம் ஆண்டில் முக்கியத்துவம் வாய்ந்த 64 ஆவது பியவர முன்பள்ளியை கண்டி, பூஜாபிட்டிய கிராமத்தில் நிறுவியிருந்தது. தேவையுள்ள சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான Hoppers இன் அர்ப்பணிப்பு இந்தத் திட்டத்தினூடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது. ஹேமாஸ் உடன் இணைந்து பியவர முன்பள்ளிகளுக்கு மேலும் உதவிகளை வழங்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது.
ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷிரோமி மசகொரல குறிப்பிடுகையில், “Hoppers லண்டன் உடன் கொண்டுள்ள பங்காண்மை தொடர்பில் பெருமை கொள்கின்றோம். இலங்கையின் குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களின் நலன்புரிச் செயற்பாடுகளில் அவர்கள் காண்பிக்கும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது. 2022 இல், இந்தத் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிப்பினூடாக ஆறு மாவட்டங்களில் 15 தெரிவு செய்யப்பட்ட பியவர முன்பள்ளிகளின் 367 சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் பயன்பெற்றிருந்தனர். 2023 ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் மேலும் வியாபிக்கப்பட்டு, 11 மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 34 முன்பள்ளிகளின் 1160 சிறுவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆதரவளிக்கின்றது.” என்றார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து, 2002 ஆம் ஆண்டு ஹேமாஸ் அவுட்ரீச் மையம் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் ஆரம்ப சிறுவர் பராமரிப்பு மற்றும் விருத்தி (ECCD) தேசிய நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளுக்கு ஹேமாஸ் தொடர்ந்தும் ஆதரவளிப்பதை பிரதிபலிப்பதாக பியவர அமைந்துள்ளது.
ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தின் தவிசாளர் அப்பாஸ் ஈசுபாலி கருத்துத் தெரிவிக்கையில், “சகல பிள்ளைகளுக்கும் கைகொடுப்பது எனும் தேசிய தேவையை நிவர்த்தி செய்வதற்காக எம்முடன் கைகோர்த்துள்ள கரன் கோகானி மற்றும் Hoppers அணியினருக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். அவர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு உண்மையில் வரவேற்கத்தக்கது. தேசத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நன்கொடையாளர்களுக்கு முன்வந்து இயங்கக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலங்கையின் அதிகாரத் தரப்பினர் அவசியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.” என்றார்.
Hoppers London ஐச் சேர்ந்த கரன் கோகானி கருத்துத் தெரிவிக்கையில், “2015 ஆம் ஆண்டில் நாம் எமது முதலாவது அப்பம் உணவகத்தை திறந்திருந்தோம். உணவு, கலாசாரம் மற்றும் இலங்கை மக்களின் கோரிக்கையின் பிரகாரம் இந்த உணவகத்தை திறந்திருந்தோம். தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் எமது ஈடுபாடு அதிகரித்ததுடன், 2022 ஆம் அண்டில் நெருக்கடி ஏற்பட்ட போது, இலங்கையில் நிலவும் சூழலை கவனத்தில் கொண்டு, தொலைவில் இருந்தவண்ணம் நாம் மிகவும் அவதியுற்றோம். நீண்ட காலம் நிலைத்திருக்கும், வெளிப்படையான மற்றும் அர்த்தமுள்ள நலன்புரித் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என்பதில் நான் ஆர்வமாக இருந்ததுடன், களத்தில் Hoppers இனால் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும் எனவும் கருதினேன். அப்பாஸ், ஷிரோமி மற்றும் ஹேமாஸ் போன்ற எமது பகிரப்பட்ட நோக்கத்தை கொண்டிருந்த தரப்பினரை இனங்கண்டிருந்தமை கனவு நனவாகும் தருணமாக அமைந்திருந்தது. திட்டம் எந்தளவு சுமுகமாகதாகவும் வினைத்திறனானதாகவும் அமைந்துள்ளது என்பது பற்றி நாம் திருப்தி கொள்வதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் எமது ஆதரவை தொடர்ந்தும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago