2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

ஹேமாஸ் குரூப் மற்றும் லங்கா சதொச இணைவு

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றாடலை பேணும் செயற்பாட்டின் முக்கிய நகர்வாக, லங்கா சதொச நிறுவனத்துடன் ஹேமாஸ் கைகோர்த்துள்ளது. அதனூடாக சமூகத்தில் அதிகரித்துச் செல்லும் பிளாஸ்ரிக் மாசுக்கு தீர்வு காண்பதுடன், நிலைபேறான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

ஹேமாஸ் கன்சியுமர் பிரான்ட்ஸ் விற்பனை அணியினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தினூடாக, லங்கா சதொசவில் ஹேமாஸ் தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மீளப் பயன்படுத்தக்கூடிய இலவச பை வழங்கப்படும். முதற் கட்டமாக, 40,000 சூழலுக்கு நட்பான பைகள் நாடு முழுவதிலும் காணப்படும் 440 லங்கா சதொச விற்பனையகங்களில் விநியோகிக்கப்படும்.

விற்பனை நிலையங்களின் வாடிக்கையாளர்கள் சமூகமளிப்புக்கமைய இந்த Eco பைகள் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், இந்த பைகள் பிரத்தியேகமான குறியீட்டு கட்டமைப்பை கொண்டிருக்கும். அதனூடாக தொடர்ச்சியாக இவற்றை பயன்படுத்துகையில், அவற்றை மீளப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு விலைக்கழிவுகள் வழங்கப்படும். அதனூடாக சமூகத்தாரிடையே நிலைபேறான பழக்கங்களை ஊக்குவிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், பொறுப்பு வாய்ந்த பிளாஸ்ரிக் கழிவு அகற்றலை ஊக்குவிக்கும் வகையில், ஹேமாஸ் மற்றும் லங்கா சதொச ஆகியன, சதொச விற்பனை நிலையங்களில் பிரத்தியேகமான பிளாஸ்ரிக் கழிவு சேகரிப்பு பகுதிகளை நிறுவியுள்ளன. இந்த பகுதிகளில் பொறுப்பு வாய்ந்த வகையில் பிளாஸ்ரிக் பொருட்களை இடும் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டு, மாதாந்த அதிர்ஷ்டசாலி தெரிவு முன்னெடுக்கப்படும். அதனூடாக பொறுப்பு வாய்ந்த கழிவு அகற்றல் நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்கின்றமைக்காக மேலதிக வெகுமதிகள் வழங்கப்படும்.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் கருத்துத் தெரிவிக்கையில், “ஹேமாஸில், பிளாஸ்ரிக் கழிவை கையாள்வது தொடர்பில் எமது கடமையை நாம் முன்னெடுக்கின்றோம். லங்கா சதொச உடன் கைகோர்த்துள்ளமையானது, நிலைபேறான எதிர்காலத்தை நோக்கிய முக்கிய நகர்வாக அமைந்துள்ளது. சிறந்த விழிப்புணர்வு மற்றும் நற்பண்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. சூழலுக்கு நட்பான செயற்பாடுகளை பின்பற்றுவதற்கு எமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதானது, அவர்களின் நுகர்வு பழக்கத்தில் மாற்றத்தை தோற்றுவிப்பதுடன், ஆரோக்கியமான சூழலுக்கு பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

லங்கா சதொச லிமிடெட் தவிசாளர் பசந்த யாபா அபேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “எமது சமூகங்களில் நிலைபேறாண்மையை ஊக்குவிப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். ஹேமாஸ் நிறுவனத்துடன் இந்தப் பங்காண்மை இந்த இலக்கை நோக்கிய முக்கிய நகர்வாக அமைந்துள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த சதொச வலையமைப்பினூடாக, இந்தத் திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.

ஹேமாஸ் குழுமத்தின் சூழல்சார் நிகழ்ச்சி நிரலான, உள்நாட்டு சமூகத்தில் நிலைபேறான செயன்முறைகளை ஊக்குவிக்கவும், சகல நுகர்வோர் பிளாஸ்ரிக் கழிவுகளை நீக்குவதற்கான அர்ப்பணிப்பு என்பதற்கமைய முக்கிய அங்கமாக இந்த கைகோர்ப்பு அமைந்துள்ளது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .