Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொவிட்-19 சிகிச்சைகளை வழங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களைச் சேர்ந்த முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதையும் சேர்ந்த பிரண்டிக்ஸ் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து, அவர்கள் பாதுகாப்புக்காக ஏற்றுமதித் தரம் வாய்ந்த பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக் கவசங்கள் (PPE) போன்றவற்றை தயாரித்து வழங்க முன்வந்தனர். இந்த PPE அங்கிகளை வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு பிரண்டிக்ஸ் ஊழியர்களால் கையளிக்கும் நிகழ்வுகள் கடந்த சில வாரங்களில் இடம்பெற்றன.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு தமது சுகாதாரத்தை ஆபத்துக்குட்படுத்தி இயங்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தி ஆதரவளிக்கும் வகையில், பிரண்டிக்ஸ் ஊழியர்கள் இந்த ஏற்றுமதித் தரம் வாய்ந்த பாதுகாப்பு அங்கிகள் 490,000 மற்றும் 250,000 முகக் கவசங்கள் போன்றவற்றை தயாரித்து வழங்கியிருந்தனர். இந்த அங்கிகள் விநியோகிக்கப்படும் முன்னர் தொற்று நோய்களுக்கான சிகிச்சை வைத்தியசாலையின் (IDH) சகல நியம பரிசோதனைகளையும் நிவர்த்தி செய்திருந்தன. 23 வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு அங்கிகள் விநியோகிக்கப்பட்டிருந்ததுடன், பிரண்டிக்ஸ் ஊழியர்களால் 9 வைத்தியசாலைகளுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
COVID-19 நோயால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்ற பிரண்டிக்ஸ் இணை பயிற்சியாளர் நிலங்கா பர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப்பரவல் என்பது எமது வாழ்க்கையில் இதுவரையில் நாம் எதிர்கொண்டிராத ஒண்டு, மேலும் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னின்று சிகிச்சைகளை வழங்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பெருமளவு அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெறும் போது, எமக்கு சிகிச்சைகளை வழங்குவோர் எதிர்கொண்டிருந்த தியாகங்கள் தொடர்பில் நேரடியாக காணக் கிடைத்தது. அவர்களுக்கு எம்மாலான பங்களிப்பொன்றை வழங்கக் கிடைத்தமைக்காக எனக்கு பெரிதும் பெருமையாக உள்ளது. அவர்கள் அணியும் பாதுகாப்பு அங்கிகள் உயர் தரங்களுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ளதை தனிப்பட்ட வகையில் என்னால் உறுதியளிக்க முடியும் என்பதுடன், அவர்களின் கடமையின் போது இந்த அங்கிகள் அவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்திருக்கும்.” என்றார்.
கொழும்பில் தொற்றுநோய் சிகிச்சை வைத்தியசாலை, ஹோமகம வைத்தியசாலை மற்றும் நெவில் பெர்னான்டோ வைத்தியசாலை, மட்டக்களப்பு பூனானி வைத்தியசாலை மற்றும் கேகாலை ரம்புக்கனை வைத்தியசாலை போன்றவற்றுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும், இரத்தினபுரியின் கஹவத்த மற்றும் நிவிதிகல வைத்தியசாலைகள், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த கேகாலை போதனா வைத்தியசாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலை ஆகியவற்றுக்கும், ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
படம்: நாடு முழுவதிலுமுள்ள பிரண்டிக்ஸ் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தமது பிரதேசங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக் கவசங்களை அன்பளிப்பு செய்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago