Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 பெப்ரவரி 26 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியசாலைகளில் நிலவும் மின் விநியோக நெருக்கடி நிலையை மேம்படுத்துவதற்காக 1.23 பில்லியன் ஜப்பானிய யென்களை வழங்குவதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர். இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த உதவியினூடாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் காபன் வெளிப்பாட்டை குறைப்பதற்கும், மின்சார செலவுகளால் ஏற்படும் நெருக்கடியை தணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உதவியுடன், குறித்த வைத்தியசாலைகளில் சூரிய மின் வலுக் கட்டமைப்புகள் நிறுவப்பட்டு, தொடர்ச்சியான மின்விநியோகம் உறுதி செய்யப்படும் என்பதுடன், 2030 ஆம் ஆண்டளவில் மின்சாரத் தேவையின் 70%க்கும் அதிகமான பகுதியை புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்ளும் இலக்குக்கு பங்களிப்பு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் சுகாதாரப் பராமரிப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட எரிபொருள் உதவியைப் போன்றதாக இந்தத் திட்டமும் அமைந்திருக்கும். இந்த சுகாதார பராமரிப்பு நிலையங்களின் மீண்டெழுந்திறனை மேம்படுத்தும் வகையில் இந்த சூரிய மின் பிறப்பாக்கல் வசதிகள் அமைந்திருக்கும் என்பதுடன், இலங்கை மக்களின் நலனை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு செலுத்தும். சுகாதார பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதிலும், நிலைபேறான வலுத் தீர்வுகளை ஊக்குவிப்பதிலும் காண்பிக்கும் உறுதியான அர்ப்பணிப்பை இந்த கைகோர்ப்பு உறுதி செய்வதுடன், ஜப்பான் மற்றும் இலங்கை இடையே காணப்படும் பரஸ்பர உறவுகளையும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சூரிய மின் பிறப்பாக்கல் வசதியை வெற்றிகரமாக நிறுவுவதற்கு ஜப்பானிய அரசாங்கம் எதிர்பார்ப்பதுடன், புதுப்பிக்கத்தக்க வலு இலக்குகளை எய்துவதற்கும், பசுமையான எதிர்காலத்தை கொண்டிருப்பதற்கும் ஆதரவளிப்பதாகவும் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago