2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வைத்திய நிபுணர்களை இலவசமாகவே அணுகும் வாய்ப்பை வழங்கும் AIA இன்ஷுரன்ஸ்

S.Sekar   / 2021 மார்ச் 26 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரோக்கிய, நல்வாழ்வு சேவைகளை வழங்குவதை AIA இன்ஷுரன்ஸ் ஆரம்பித்திருக்கின்றது. AIA வாடிக்கையாளர்கள் தற்போது oDoc செயலியின் ஊடாக இலவசமாக ஆரோக்கிய, நல்வாழ்வு விசேட நிபுணர்களை அணுகக்கூடியதாக இருக்கும். இந்த முன்னோடியான சலுகையினை ரூ.100இ000 க்கும் அதிகமான வருடாந்தக் கட்டுப்பணப் பெறுமதியுடைய காப்புறுதித் திட்டம் ஒன்றை வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் அனுபவிக்க முடியும். மேலும் இலங்கை மருத்துவச் சபையில் பதிவு செய்துள்ள ஆரோக்கிய, நல்வாழ்வு நிபுணர்கள் இதன் மூலமாக தொடர்ச்சியான ஆலோசனைகளை முன்னெடுப்பார்கள். உங்களின் உடல், உள, ஊட்டச்சத்து போன்ற தேவைகளின் அடிப்படையில் நீங்கள் விசேட ஆரோக்கிய, நல்வாழ்வு நிபுணர்களைத் தெரிவு செய்யவும் முடியும். நீங்கள் உங்களின் வீட்டில் மிகவும் சௌகரியமாக இருந்தவாறே ஊட்டச்சத்து நிபுணர்கள், உணவு நிபுணர்கள், உள ஆரோக்கிய நிபுணர்கள் அல்லது இயன் மருத்துவர்கள் போன்றோரிடமிருந்து வருடமொன்றுக்கு இலவசமான ஆறு கைபேசி செயலியின் ஊடான ஆலோசனைகளைப் பெறக்கூடியவாறே இச்சலுகை வடிவமைக்கப்பட்டுள்ளது. நல்வாழ்வு மற்றும் ஆரோக்கிய ஆலோசனைகளுக்காக AIA ஒரு வருடத் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ள அதேநேரத்தில் வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் நேரத்தில், விரும்பியவாறு, அவர்களுக்கு விருப்பமான ஆரோக்கிய, நல்வாழ்வு நிபுணர்களைத் தெரிவு செய்தும் கொள்ளலாம்.  

யுஐயு இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில், ‘AIA என்பது வெறுமனே மிகச்சிறந்த காப்புறுதித் திட்டங்களை உருவாக்குவதோடு மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு இறுதி வரையில் அனுகூலங்களை வழங்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றும் நிறுவனமாகும். எங்களுடைய நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான, மிகச்சிறந்த வாழ்க்கையினை வழங்குவதாகும்; ஆகவே எங்களுடைய வாடிக்கையாளர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்றும் அவர்களின் நல்வாழ்வுப் பயணத்தைத் தொடரவும் அவர்களுடைய வாழ்க்கையில் அர்த்தமுள்ள நேர்மறையான விளைவுகளை இலகுவாக எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றியுமே நாங்கள் கவனத்திற்கொள்ள வேண்டியிருந்தது. எனவே எங்களுடைய வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் உண்மையாகவே பெறுமதியினைச் சேர்ப்பதற்கும் மற்றும் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உதவுவதற்காகவே நாங்கள் இங்கே அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

AIA இன் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி சிவந்தி டீ அல்விஸ் கருத்துத் தெரிவிக்கையில் 'எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அவசியமான மற்றும் வினைத்திறனான திட்டம் ஒன்றை காப்புறுதித் துறையில் முதன் முதலாக அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். ஒவ்வொருவரும் தன்னால் எந்தளவுக்கு மிகச்சிறப்பானவராகச் செயற்பட முடியுமோ அந்தளவுக்கு சிறப்பாகச் செயற்பட வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம். அதாவது நீங்கள் உங்களின் ஆரோக்கியத்திலும், மற்றும் நல்வாழ்விலும் மிகவும் திருப்திகரமானவராக இருக்க வேண்டும் என்பதையே இது கருதுகின்றது. மேலும் நம் அனைவராலும் ஓரளவு தொழில்நுட்ப அறிவையும் மற்றும் உதவிச் சேவையினையும் பயன்படுத்த முடியும் என்பதனாலும், எங்களுடைய வாடிக்கையாளர்களின் நல்வாழ்வு, வாழ்க்கைப் பயணங்கள் முழுவதும் அவர்களை ஊக்குவிக்கவும் மற்றும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் இலங்கையின் முன்னோடியான டெலிமெடிசின் சேவை வழங்குநரான oDoc உடன் நாங்கள் கைகோர்த்திருக்கின்றோம்' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .