2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

வெளிநாட்டு பல்கலைக்கழக கொடுப்பனவுகளுக்கு கொமர்ஷல் வங்கியிடமிருந்து சலுகைகள்

Freelancer   / 2024 செப்டெம்பர் 20 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அப்பல்கலைக்கழகங்களுக்கு பணம் செலுத்தும் மாணவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கவுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

இதற்கிணங்க 2024 நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் புதிய மாணவர் கோப்புகளைத் திறக்கும் இலங்கையர்களுக்கான ஆரம்ப தந்தி பரிமாற்ற (TT) கட்டணங்களை பாதியாகக் குறைப்பதாகவும், அக்காலப்பகுதியில் பெறப்படும் கல்விக் கடன்களுக்கான வட்டி வீதத்தை 0.5% குறைப்பதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டுக் கல்விக் கொடுப்பனவுகளுக்கு கொமர்ஷல் வங்கியைத் தங்கள் பங்குதாரராக தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் வெளிநாட்டு பகுதிகளுக்கு சிரமமில்லாமல் பணம் செலுத்துவதற்கு, UnionPay சர்வதேச டெபிட் அட்டை இலவசமாக வழங்கப்படும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

மேலதிகமாக, இத்தகைய மாணவர்கள் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் துரிதப்படுத்தப்பட்ட நடைமுறைகள் மற்றும் வங்கியின் சர்வதேச ரீதியிலான வலுவான வலையமைப்பின் மூலமும் பயனடைவார்கள்.

வங்கியானது எளிமையான, எல்லையற்ற நிதி பரிமாற்றங்களை வழங்குவதற்கு மிகச்சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வெளிநாட்டுக் கல்வியை எளிதாக்குவதற்கு சிறந்த பங்காளித்துவத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கல்வியைத் தொடர்ந்து கொண்டு தொழில் புரியும் மற்றும் தொழில் இல்லாத மாணவர்களுக்கு தளர்வான விதிமுறைகளுடன் கல்விக் கடன் வசதிகளை வழங்குகிறது. இந்தக் கடன்கள் மீளச்செலுத்துவதற்கான நீண்ட காலத்தையும் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களையும் கொண்டவையாக திகழ்கின்றன. மேலதிகமாக, இக்கடன் வசதியானது மாணவர்கள் தமது கடனின் முதலினை முதலில் செலுத்தாது முதல் இரு வருடங்களுக்கு வட்டியை மட்டுமே செலுத்தும் சலுகையை வழங்குகிறது. அதாவது இரண்டு வருடத்திற்கு பின்னரே முதலினை செலுத்தக்கூடிய வசதி இதன் மூலம் வழங்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X