Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
E-விவசாய கட்டமைப்புகள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் வழிமுறைகள் தொடர்பான புரிந்துணர்வை துறைசார் பங்காளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் TAMAP இனால் e-விவசாயம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்பகுதிகள் பயிற்சிப்பட்டறை அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வுகள், பயிற்சி நிலையத்துடன் (HARTI) கைகோர்த்து தனியார், அரச துறைகளைச் சேர்ந்தவர்களுடன் இந்த பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தது. விவசாயிகளுக்கு டிஜிட்டல் ரீதியில் பெற்றுக் கொடுக்கக்கூடிய தீர்வுகள் பற்றி இந்த கருத்தரங்கில் ஆராயப்பட்டிருந்தது. சந்தைகள், சந்தை வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வதற்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய புதிய விவசாய தொழில்நுட்ப அப்ளிகேஷன்கள் தொடர்பில் பங்குபற்றுநர்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. தற்போதைய கொவிட்-19 இடர்நிலையானது, உடனுக்குடனான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், சமூகத் தூரப்படுத்தலை பேணுவதற்கும் e-விவசாய தீர்வுகளை பின்பற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தியிருந்தது.
நேரடியாகவும், ஒன்லைன் மூலமாகவும் பயிற்சிப்பட்டறையில் இணைந்து கொண்டவர்களை (HTAMAP அணித் தலைவர் கலாநிதி. கிறிஸ்டோஃவ் பட்ஸ்லன் வரவேற்று உரையாற்றும் போது, “இலங்கையில் ந-விவசாய தீர்வுகளுக்கான கேள்வி தொடர்பில் ஆராயும் நடவடிக்கைகளை TAMAP ஆரம்பித்துள்ளது. TAMAP, HARTI ஆகியன இணைந்து நீண்ட காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்த வண்ணமுள்ளன. மேலதிக கலந்துரையாடல்களுக்கான நுழைவுப் பகுதியாக இந்த பயிற்சிப்பட்டறை அமைந்துள்ளதுடன், e-விவசாயம் தொடர்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வதாகவும் அமைந்துள்ளது. இலங்கையில் e-விவசாயம், டிஜிட்டல் சந்தைப்பகுதிகள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்தப் பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.' என்றார்.
TAMAP இன் செபாஸ்டியன் பல்செராக் Zoom ஊடாக இந்தப் பயிற்சிப்பட்டறையில் இணைந்து e-விவசாயம் என்றால் என்ன என்பது தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார். அத்துடன், e-விவசாயக் கட்டமைப்புகள், அப்ளிகேஷன்கள் தொடர்பான மேலோட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார். e-விவசாயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள், தற்போதைய பங்குபற்றுநர்கள், பாரியளவு, சிறியளவு செயற்பாட்டாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடையேயான ஈடுபாடுகள் போன்றன தொடர்பிலும் அவர் விளக்கமளித்திருந்தார்.
FAOஇன் டிஜிட்டல் விவசாய மூலோபாயம், இலங்கையில் e-விவசாயம் தொடர்பான திட்டம் வழிமுறை தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உணவு, விவசாய அமைப்பின் பிரதிநிதி கலாநிதி. Xuebing Sun உரையாற்றும் போது, 'விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக குயுழுஇனால் பின்பற்றப்படும் பிரதான மூலோபாயமாக e-விவசாயம் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் டிஜிட்டல் சமூகத்துக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கும் துறைசார்ந்தவர்களுக்கும் உதவிகளை வழங்க குயுழு தன்னை அர்ப்பணித்துள்ளது. தேசிய நோக்கு மற்றும் ஒட்டுமொத்த தந்திரோபாய இலக்குகளுடன் பரிபூரண டிஜிட்டல் விவசாய வழிமுறை எனும் தேசிய வழிமுறை ஒன்றை ஏற்படுத்துவது இலக்காக அமைந்துள்ளது. தேசத்தின் டிஜிட்டல் விவசாய முன்னுரிமைகளை இனங்காணல், இடையீடுகள் தொடர்பான பகுதிகளை வரைவிலக்கணப்படுத்தல், பங்குதாரர்களின் பொறுப்பு, அவசியமான வளங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதனூடாக இந்த இலக்கை எய்தக்கூடியதாக இருக்கும்.
பொருத்தமான விவசாய தொழில்நுட்பங்களை விவசாய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் முகவர் அமைப்பு எனும் வகையில், தேசிய விவசாய தகவல், தொடர்பாடல் நிலையம், விவசாயத் திணைக்களத்தின் பிரதிநிதி எஸ். பெரியசாமி, இலங்கையில் e-விவசாய கட்டமைப்புக்கு இலங்கை அரசாங்கத்தின் தேவைப்பாடுகள் என்ன என்பது தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
செயற்றிட்டத்தில் பங்காளர்களை ஈடுபடுத்துவதில் NAICC சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், விவசாய திணைக்களத்தால் வடிவமைக்கப்பட்டிருந்த சில தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்பாடுகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் நிர்வாக தகவல் கட்டமைப்புகள், மொபைல் அப்ளிகேஷன்கள், இணையத்தளங்களினூடாக தகவல் பரிமாற்றம், வானொலி ஒலிபரப்பு, அழைப்பு நிலைய தீர்வுகள், சமூக ஊடக அடிப்படையான தீர்வுகள், டிஜிட்டல், அச்சு பிரசுரங்கள் போன்றன அடங்குவதாக குறிப்பிட்டார்.
HARTI இன் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர். ரஞ்சித் பிரேமலால் டி சில்வா டிஜிட்டல் சந்தைக் கட்டமைப்புகள் - பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார். இதன் போது விவசாயிகள் இந்த மாற்றத்தை பின்பற்றி, ஒன்லைன் ஊடான செயற்பாடுகளுக்கு மாறுவதற்கு தயாராகவுள்ளனரா என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். பண்ணையிலிருந்து உணவுத் தட்டு வரை, விநியோகச் சங்கிலி என்பது மிகவும் நீண்டது. டிஜிட்டல் சந்தைப்பகுதி கட்டமைப்புகளினூடாக இதை குறைத்துக் கொள்ள முடியும் என்றார். விவசாயிகளின் எதிர்பார்ப்புகள், கொள்வனவாளர்ஃநுகர்வோர் கரிசனைகள், இடைத்தரகரின் ஆதிக்கம், பொருட்கள் விநியோகம் மற்றும் தொழில்நுட்ப பின்புலம் போன்ற சில நெருக்கடிகள் பற்றியும் விளக்கமளித்திருந்தார்.
இலங்கையில் விவசாயத்துறைக்கான சில டிஜிட்டல் சந்தைக் கட்டமைப்புகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. HARTI இன் GIS அலகின் எச்.எம்.ஜே.கே. ஹேரத், ர்யுசுவுஐ கட்டமைப்பு, Croptronix இன் கொவிபொல, Epic இன் Helaviru, டயலொக்கின் Govi Mithuru தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார். இந்த கட்டமைப்புகள் தொடர்பில் காணப்படும் சவால்கள் பற்றியும் பங்குபற்றுநர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், பாவனையாளர் பெறுமதியை வலிமைப்படுத்துவது தொடர்பான எதிர்கால வழிகாட்டல்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருந்தன.
e-விவசாய அபிவிருத்தி தொடர்பில் காணப்படும் தடங்கல்களை தகர்ப்பதற்கான மூலோபாயங்களைப் பற்றி ஆராயும் குழுநிலை கலந்துரையாடலும் இதன் போது இடம்பெற்றது. பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் புத்தி மரம்பே இந்த பயிற்சிப்பட்டறையின் வளவாளராக செயலாற்றியிருந்ததுடன், குழுநிலை கலந்துரையாடல்களையும் முன்னெடுத்திருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் நிகழ்ச்சி முகாமையாளரான கலாநிதி. ஒலாஃவ் ஹெய்டில்பா கருத்துத் தெரிவிக்கையில், “அரசாங்கத்துடன் இணைந்து கடந்த காலங்களில் தனியார் துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன. எதிர்காலத்துக்கான எனது பிரதான பரிந்துரை என்பதுடன், நாட்டின் e-விவசாய மூலோபாயத் திட்டமாகும். இதனூடாக, வெவ்வேறு பங்காளர்களின் ஒப்பீட்டு அனுகூலங்கள் தொடர்பில் ஆராய்ந்து, யார் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் என்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றனர். இலங்கையில் ந-விவசாயம் என்பதன் வடிவமைப்பானது, தனியார் துறை செயற்பாடுகளில் பெருமளவில் தங்கியுள்ளன. அரசாங்கத்தினால் வழங்கப்படும் பங்களிப்புகள் தொடர்பில் நான் திருப்தி கொள்கின்றேன்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago