Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 செப்டெம்பர் 10 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, தனது 2020 வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் நிகழ்வில் வங்கியில் சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனை நிறைவேற்று அதிகாரிகளை கௌரவித்திருந்தது. தொற்றுப் பரவலுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சிறப்பாக அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்த செலான் வங்கியின் விற்பனை செயலணியினரின் செயற்பாடுகள் இந்த நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டிருந்தது.
நிறுவனத்தின் வலிமையில் அதன் ஊழியர்கள் தூண்களாக அமைந்திருப்பதாக செலான் வங்கி நம்பிக்கை கொண்டுள்ளது. சவால்கள் நிறைந்த 2020 ஆம் ஆண்டில் சிறந்த பெறுபேறுகளை எய்துவதற்காக தமது சௌகரியமான வலயங்களிலிருந்து அவர்கள் வெளியேறி செயலாற்றியிருந்தனர். பொறுப்பு வாய்ந்த நிதிச் சேவைகளை வழங்கும் வங்கி எனும் வகையில், இது போன்ற நெருக்கடியான காலப்பகுதியில் ஊழியர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக, அவர்கள் மத்தியில் நேர்த்தியான மனநிலையை உருவாக்கி பேணுவதில் செலான் வங்கி நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் காரணமாக அவர்களின் முயற்சிகளுக்கு வரவேற்பளிப்பதற்கு மேலதிகமாக, சகல ஊழியர்களுக்கும் பாதுகாப்பாக பணிக்கு சமூகமளிப்பதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சவால்கள் நிறைந்த ஆண்டிலும் முழு சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக அனுகூலங்கள் போன்றனவும் வழங்கப்பட்டிருந்தன.
ஆண்டின் சிறந்த அணித் தலைவர் எனும் விருதை சங்கல்ப குமாரபெலி பெற்றுக் கொண்டதுடன், ஆண்டின் சிறந்த விற்பனைஅதிகாரி விருதை கயங்க ஆரியரட்ன பெற்றுக் கொண்டார்.
அணித் தலைவர் பிரிவில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்கள் எனும் கௌரவிப்பைப் பெற்றவர்களில் ஷிரான் ஹெட்டியாரச்சி (பிரத்தியேக கடன்கள் விற்பனை), மாலன் கபந்துகம (வீடமைப்பு கடன்கள் விற்பனை), துமிந்த வெடிசிங்க (கடன் அட்டை விற்பனைகள்) மற்றும் சங்கல்ப குமாரபெலி (குத்தனை விற்பனைகள்) ஆகியோர் அடங்கியிருந்தனர். இஷங்க மனம்பெரி (பிரத்தியேக கடன்கள் விற்பனை), ஹிமன்ஸ பிரேமதிலக (வீடமைப்பு கடன்கள் விற்பனை) மற்றும் மலிந்த லியனகே (கடன் அட்டை விற்பனைகள்) ஆகியோர் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டவர்களில், லோச்சன ஏக்கநாயக்க (பிரத்தியேகக் கடன்கள் விற்பனை) மற்றும் அன்ஜுன பெரேரா (வீடமைப்பு கடன்கள் விற்பனை) அடங்கினர்.
சந்தைப்படுத்தல் அதிகாரி பிரிவில் சிறப்பாக செயலாற்றியவர்களாக பிரதீப் மதுசங்க (பிரத்தியேக கடன்கள் விற்பனை), கயங்க ஆரியரட்ன (வீடமைப்பு கடன்கள் விற்பனை), பாக்யா மதுரங்கி (கடன் அட்டை விற்பனைகள்) மற்றும் சம்பத் அத்தநாயக்க (லீசிங் விற்பனைகள்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டவர்களில் சுனிமல் சுதர்ஷன, சமித் தில்ஷான், சஹிந்து மல்லுவவடு மற்றும் தரிந்து ஹர்ஷன ஆகியோர் அடங்கியுள்ளதுடன், தாரக பெர்னான்டோ (பிரத்தியேக கடன்கள் விற்பனை), ஹேஷான் விதானகே (வீடமைப்பு கடன்கள் விற்பனை), அசங்க பெர்னான்டோ (கடன் அட்டை விற்பனைகள்) மற்றும் லோஷன் ஜயசேகர (லீசிங் விற்பனை) ஆகியோர் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டவர்களில் அடங்கியிருந்தனர்.
அணித் தலைவர் பிரிவில் இஷங்க மனம்பெரி, ஹிமன்ஸ பிரேமதிலக, துமிந்த வெடிசிங்க மற்றும் சங்கல்ப குமாரபெலி ஆகியோரும், சந்தைப்படுத்தல் அதிகாரி பிரிவில் சுதர்ஷன அதுகோரல, கயங்க ஆரியரட்ன, சஹிந்து மல்லுவாவடு மற்றும் மஹேஷ் ஏக்கநாயக்க ஆகியோரும் 2020 ஆம் ஆண்டின் மிக உயர்ந்த Hall of Fame கௌரவிப்புக்காக முன்மொழியப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
42 minute ago
47 minute ago