2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விரைவில் நியம தொழிற்பாட்டு விதிமுறை அறிமுகம்

S.Sekar   / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு வாகனப் பொருத்துகை மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொடர்பான நியம தொழிற்பாட்டு விதிமுறையை (SOP) அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் இயங்கும் தொழிற்துறை அமைச்சு, விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுக்கு உள்நாட்டில் வாகனப் பொருத்துகைகளை முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை வாகனங்கள் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் திமந்த ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் உயர் தர நியமங்களைப் பின்பற்ற புதிய SOP தயாரிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை அமைச்சின் கொள்கை வடிவமைப்புப் பிரிவினால் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம், மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம், இலங்கை மோட்டார் வாகன பொருத்துகை மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் ஆகிய சகல தரப்பினருடனும் இணைந்து இந்த SOP தயாரிக்கப்பட்டுள்ளது. SOP இன் அறிமுகத்துடன், சகல வாகனப் பொருத்துகைகளும் SOP ஐ பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு பெறுமதி சேர்ப்பது எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றார்.

SOP இல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், முதலீட்டு சபை, இலங்கை சுங்கம் மற்றும் தொழிற்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வாகன பொருத்துகைகள் போன்றவற்றுக்கு த்தில் பதிவு செய்வது தொடர்பான நியமங்களுக்கான வழிகாட்டல்கள் போன்றன SOP இல் அடங்கியிருக்கும்.

உற்பத்தி செயன்முறை மற்றும் பொருத்துகை, வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் மற்றும் மதிப்பீட்டு வசதிகள் போன்றன தொடர்பான அவசியமான ஒழுங்குவிதிமுறைகளைக் கொண்டுள்ளது. பொருத்தப்பட்ட மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான வழிகாட்டல்களையும் கொண்டுள்ளதுடன், வரி விலக்குகள் வழங்கப்படுவது தொடர்பிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜயவர்தன தொடர்ந்து குறிப்பிடுகையில், “முதல் நிலையில் உள்நாட்டு சந்தையில் இந்தத் துறைக்கு விரிவாக்கமடைவதற்கு அவசியமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை SOP தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த இலக்கை எய்துவதற்கு, குறிப்பிடத்தக்களவு முதலீடுகள் உள்நாட்டு பெறுமதி சேர்க்கப்பட்ட வாகனப் பொருத்துகை/உற்பத்தி துறையில் காணப்பட வேண்டும் என்பதுடன், அதனூடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உதிரிப்பாகங்களுக்கு அதிகளவு கேள்வி உருவாக்கப்படும் என்பதுடன், அவற்றின் தரம் அதிகரிக்கப்பட்டு, புகழ்பெற்ற சர்வதேச நியமங்களை எய்துவதற்கும் ஏதுவாக அமைந்திருக்கும்.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “SOP இல் தொழிற்துறையை பாதுகாப்பு மற்றும் தர நியமங்களுக்கு பதிவு செய்வது முதல் ஒவ்வொரு ஐந்தாண்டு காலப்பகுதியிலும் அதனை மீளாய்வு செய்து மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலான, தொழிற்துறையுடன் தொடர்புடைய மாறுபட்ட அம்சங்கள், விதிமுறைகள், செயன்முறைகள் மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.  உள்நாட்டு பொருத்துகையில் ஈடுபடுவோருக்கு முதல் இரு வருடங்களில் முதலீடுகளை மேற்கொண்டு, செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான நெகிழ்ச்சித்தன்மை வழங்கப்படுவதுடன், 2 வருட காலப் பகுதியினுள் செயற்பாடுகளை ஆரம்பித்து வழிகாட்டல்களைப் பின்பற்றுவது தொடர்பான நெகிழ்ச்சித் தன்மையை வழங்குவதாக அமைந்திருக்க வேண்டும்.” என்றார்.

20,000 க்கும் அதிகமான நேரடி தொழில் வாய்ப்புகள் மற்றும் 25,000க்கும் அதிகமான மறைமுக தொழில் வாய்ப்புகள் அடுத்த 2 முதல் 3 வருட காலப்பகுதியில் உருவாக்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். தற்போது திறன் விருத்தி அமைச்சு, NAITA மற்றும் German Tech ஆகியவற்றுடன் இணைந்து உள்நாட்டு வாகனப் பொருத்துகைகள் துறையில் மாணவர்களை உள்வாங்குவதற்கான பணிகளை SLACMA மேற்கொள்கின்றது.

வாகனங்களின் உள்நாட்டு உற்பத்தியில் காணப்படும் அனுகூலங்களில், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை உலகின் தலைசிறந்த உற்பத்தி நியமங்களான Just In Time, 5S, KAISEN, LEAN Manufacturing, IATF 16949 மற்றும் Six SIGMA போன்றவற்றுக்கமைவாக பெற்றுக் கொள்ள வசதியை வழங்கும். இந்த உற்பத்தி முறைகளை இதர உற்பத்தித் தொழிற்துறைகளிலும் பின்பற்றுவதற்கு இது உதவியாக அமைந்திருக்கும்.

ஜயவர்தன இறுதியாகக் குறிப்பிடுகையில், “இலங்கையின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர்ப்பது தொடர்பான ஜனாதிபதியின் நோக்கத்தை நான் மிகவும் வரவேற்கின்றேன். உள்நாட்டு பணியாளர்களின் திறன் மட்டத்தை பெருமளவு அதிகரிக்கும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .