Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி புகைப்பரிசோதனை வலையமைப்பான Drivegreen, தனது அறிவார்ந்த, திறமைமிக்க ஊழியர்களினால் வழங்கப்படும் சிறந்த சேவைக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. நிறுவனத்தால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த கருத்தாய்வினூடாக இது கண்டறியப்பட்டிருந்தது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்திய, நட்பான, கவர்ச்சிகரமான சேவை போன்றவற்றின் காரணமாக, வாடிக்கையாளர்களினால் தமது வாகனப் புகைப்பரிசோதனைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள தொடர்ச்சியாக Drivegreen ஐ தாம் தெரிவு செய்வதாக இந்த ஆய்வினூடாக கண்டறியப்பட்டிருந்தது.
மாவத்தகமயைச் சேர்ந்த வாடிக்கையாளரான எஸ்.என்.எஸ். செனெவிரட்னவின் கருத்துப் பிரகாரம், “வாகனப் புகைப் பரிசோதனை என்பது நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பெறுமதி வாய்ந்த பொறுப்பாக நான் கருதுகின்றேன். தொடர்ச்சியான புகைப்பரிசோதனை காரணமாக, வளிமண்டலத்துக்கு வெளியிடப்படும் நச்சு வாயுக்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். இதனூடாக நாட்டின் வளித்தரம் மேம்படுத்தப்படுகின்றது. அக்காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது அதிகளவு வாகனங்கள் பாவணையிலுள்ள போதும் புகைப்பரிசோதனை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர், வளி மாசடைவதில் பெருமளவு மாற்றத்தை அவதானிக்க முடிந்துள்ளது” என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “புகைப் பரிசோதனைப் நிலையங்களை சேர்ந்த ஊழியர்கள் நட்பான வகையில் சேவைகளை வழங்குகின்றனர். இதனால், புகைப் பரிசோதனைக்குச் செல்லும் போது, அநாவசியமாக எமது நேரத்தை செலவிட வேண்டியதில்லை” என்றார்.
மருதானை பகுதியைச் சேர்ந்த தொழில்முயற்சியாளரான தஸ்னிம் கியாட் குறிப்பிடுகையில், “பரிசோதனையினூடாக பரிபூரண அறிக்கையைப் பெற்றுக் கொள்வதனூடாக, வாகனத்தை வீதியில் பயணிக்கக்கூடிய தரத்தில் பேண முடிகின்றது. இந்த பரிசோதனைப் பெறுபேறுகளினூடாக, வாகனத்தில் அவசியமான பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும், வாகனத்தின் எரிபொருள் வினைத்திறனை பேணவும் வழிகாட்டியாக அமைந்துள்ளது” என்றார்.
“வாகனப் புகைப்பரிசோதனையை முன்னெடுப்பதன் காரணமாக, உடனடியாக வாகனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு சேவைகள் தொடர்பில் என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஒரு தடவை எனது வாகனம் புகைப்பரிசோதனையில் தேர்ச்சி பெறத் தவறியிருந்தது. உடனடியாக புகைப்பரிசோதனை அணியினர் எனக்கு பெறுமதி வாய்ந்த ஆலோசனையை வழங்கியிருந்தனர். அதன் பிரகாரம், அவசியமான சீராக்கங்களை மேற்கொள்ள முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நான் மீண்டும் பரிசோதனைக்குச் சென்றேன். பரிசோதனையில் தேர்ச்சி பெற்றது மாத்திரமன்றி, வாகனத்தின் எரிபொருள் திறனும் அதிகரித்திருந்ததை என்னால் உணர முடிந்தது. அப்போது முதல் நான் தொடர்ச்சியாக எனது வாகனப் புகைப்பரிசோதனையை Drivegreenஇல் மேற்கொள்வதுடன், இதன் ஊழியர்கள் மிகவும் நட்பானவர்களாகவும், தேர்ச்சி பெற்றவர்களாகவும் அமைந்துள்ளனர்” என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “வாகனங்களினால் சூழல் மாசடைவது பற்றி நாம் அறிந்துள்ளோம். ஆனாலும், எமது போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வாகனங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், புகைப் பரிசோதனையினூடாக, வாகனங்களினால் சூழலுக்கு ஏற்படும் மாசடைதலை பெருமளவு குறைத்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது” என்றார்.
காலி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, முன்னணி சுப்பர்மார்க்கெட் தொடரின் ஊழியரான ஜே.ஏ.ஆர்.என். பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “Drivegreen இல் புகைப்பரிசோதனையில் ஈடுபடும் ஊழியர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாகவும், உதவி வழங்கக்கூடியவர்களாகவும், ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் உள்ளனர். அடிக்கடி சமூகமளிக்கும் வாடிக்கையாளர் என்பதை அவர்கள் இனங்கண்டு, உடனுக்குடன் சேவைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வருகின்றனர். சகல பரிசோதனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான சேவை வழங்கப்படுகின்றது. வளி மாசடைவதைத் தவிர்த்து, தூய காற்றை பெற்றுக் கொடுப்பதற்கான இந்தத் திட்டம் பெறுமதி வாய்ந்ததாக அமைந்துள்ளது. என்னைப் போன்ற வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது” என்றார்.
2008ஆம் ஆண்டில் DrivCleanCo லங்கா (பிரைவட்) லிமிடெட்டின் இனால் நிறுவப்பட்ட Drivegreen இன் உயர் பரிசோதனை சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் போன்றன சர்வதேச பரிசோதனை நியமங்களின் பிரகாரம் அமைந்துள்ளதுடன், திறன் படைத்த, நேர்மையான மற்றும் அர்ப்பணிப்பான செயலணியினரால், வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சேவையாற்றும் மனப்பாங்குடன் சிறந்த புகை பரிசோதனை சேவை வழங்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago