2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வாகனப் பதிவு குறைவாக இருக்கும்

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டில் வாகனங்கள் பதிவு, கடந்த 17 வருடங்களை விடவும்  மிகவும் குறைந்த பெறுமதியை பதிவு செய்யும் என, ‘பர்ஸ்ட் கெப்பிட்டல் ரிசேர்ச்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியில், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, இந்தநிலை ஏற்படும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.   

‘2019இல் பதிவாகியிருந்த வாகனப் பதிவுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் வாகனப் பதிவுகள் அரைப் பங்காக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன், 2003ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த மிகவும் குறைந்த வாகனப் பதிவுப் பெறுமதிகளைத் தொடர்ந்து, குறைவான பதிவுகளை 2020 இல் பதிவு செய்யும்.  2021 ஆம் ஆண்டிலும் வாகனப் பதிவுகள் குறைவாகக் காணப்படும்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

2020ஆம் ஆண்டு முதல், அரையாண்டு காலப்பகுதியில் புதிய வாகனப் பதிவுகள் கடந்த தசாப்த காலப்பகுதியில் பதிவாகியிருந்த மிகவும் குறைந்த பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்துள்ளன.   

எவ்வாறாயினும், தற்போதைய இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்கு முன்னதாக, 2015ஆம் ஆண்டு முதல் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.   

நாணய மதிப்பிறக்கத்தைத் தணிக்கும் வகையில், ஆகக்குறைந்தது ஒரு வருட காலத்துக்கேனும் வாகன இறக்குமதியை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தால், மொத்த இறக்குமதியில் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களைஅதாவது, கடந்த 13 வருடங்களில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த மொத்த இறக்குமதியில் 4 சதவீதத்தை, மீதப்படுத்தக்கூடியதாக இருக்கும்.  

இந்நிலையில், சந்தையில் பதிவு செய்யப்பட்ட அல்லது, பயன்படுத்திய வாகனங்களின் விலைகளும் பெருமளவு அதிகரித்துள்ளன. சந்தையில் புதிய வாகனங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வாகன வியாபாரங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்தத் துறையில் பெருமளவு தங்கியிருக்கும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் பெருமளவு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X