2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா வைத்தியசாலையில் SLT-MOBITEL இன் தைப்பொங்கல் வைபவம்

S.Sekar   / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, இந்த ஆண்டின் தைப் பொங்கல் வைபவத்தை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பாடு செய்திருந்தது. பண்டிகையின் பாரம்பரியத்தை பின்பற்றியிருந்ததுடன், வைத்தியசாலைக்கு பெறுமதி வாய்ந்த நன்கொடையையும் வழங்கியிருந்தது.

புதிய ஆரம்பம் மற்றும் இயற்கையின் அறுவடையை குறிக்கும் வகையில் தைப் பொங்கல் அமைந்துள்ளது. இந்த விசேட பண்டிகையை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் SLT-MOBITEL இன் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். வைத்தியசாலை வளாகத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வைபவத்தின் போது, SLT இன் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய பொது முகாமையாளர் எம். பத்மசுதன், 1 மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த ICU படுக்கைகளை, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர். வைத்தியர். கே.ராகுலனிடம் கையளித்தார்.  தைப் பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்துக்கமைய, பூசாரியினால் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. SLT-MOBITEL பிரதிநிதிகள் மற்றும் வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

சமூகங்களின் நலன் தொடர்பில் வைத்தியசாலையின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளின் அங்கமாக SLT-MOBITEL’இன் நன்கொடை அமைந்திருந்தது. தொற்றுப் பரவல் ஆரம்பித்தது முதல், SLT-MOBITEL இனால் தொடர்ச்சியாக அதன் செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டு, இலங்கையின் சகல பகுதிகளிலும் இணைப்புத்திறன் உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு அத்தியாவசிய சாதனங்களை வழங்கி மற்றும் இதர நன்கொடைகளினூடாக ஆதரவளித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .