Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், வருடாந்தம் சுமார் 7 மில்லியன் பேர் அழுத்தம், இருதய நோய், நுரையீரல் புற்றுநோய், சுவாசப்பைசார் நோய்கள் மற்றும் நியுமோனியா அடங்கலாக சுவாசத் தொகுதி தொற்று போன்ற வளி மாசடைவதனால் ஏற்படும் நோய்கள் காரணமாக அகால மரணமடைகின்றனர். குறிப்பாக இலங்கை அடங்கலான தென்கிழக்காசிய நாடுகளில் இந்த உயிரிழப்போரின் எண்ணிக்கை 2 மில்லியனாக அமைந்துள்ளது.
வளி மாசடைவது என்பது கண்களுக்கு இலகுவில் புலப்படாது. எனவே இந்த நோய்கள் ஏற்பட்டதும் வளி மாசடைதல் தொடர்ந்தும் காணப்படுவதனால் ஏனைய நோய்களைப் போன்று உடனடியாக குணமாக்க முடியாத நிலை காணப்படும், வளி மாசடைவது இவ்வாறு மோசமான நிலைமை காணப்பட்டாலும், ஒரு சிலர் மாத்திரமே இந்த விடயம் பற்றி அதிகளவு கவனம் செலுத்துவதுடன், அனைவரின் வாழ்க்கை, சுகாதாரம் மற்றும் நலன் ஆகியன இடர் நிலையை எதிர்நோக்குகின்றன.
இலங்கையிலும், இந்த விடயம் பாரதூரமானதாக அமைந்துள்ளது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் 45 சதவீதமான சிறுவர்கள், வளி மாசடைதலுடன் தொடர்புடைய நோய்களுக்குட்பட்டவர்களாக காணப்படுகின்றனர். மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மதிப்பாய்வினூடாக, இலங்கையில் வளி மாசடைதலால் வருடாந்தம் 7792 உயிரிழப்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில், வெற்றுக் கண்களுக்கு இலகுவில் புலப்படாத வளி மாசடைதலில் வாகன புகைகள் அதிகளவு பங்களிப்பு வழங்குகின்றன. நைட்ரஜன் ஒக்சைட்கள், சல்ஃபர் ஒக்சைட்கள், ஹைட்ரோ காபன் மற்றும் காபன்மொனொக்சைட், நச்சு வாயுக்கள் மற்றும் துணிக்கைகள் போன்றன வெற்றுக் கண்களுக்கு புலப்படாத வளி மாசில் அதிகம் காணப்படுகின்றன.
கண்களுக்கு புலப்படாத வளி, பாதுகாப்பான மட்டத்தில் இருப்பது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், 2019 ஆம் ஆண்டு IQAir AirVisual உலக வாயு தர அறிக்கையின் பிரகாரம், இலங்கையின் PM2.5 செறிமானம், சனத்தொகையின் பிரகாரம் சராசரியாக 25.20 ஆக அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில் காணப்பட்ட சராசரி பெறுமதியான 32.00 உடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமாக அமைந்துள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வளித் தரம் என்பது சிறந்தளவில் காணப்படுகின்றது. குறிப்பாக, பங்களாதேஷில் அதிகளவு வளி மாசடைவு காணப்படுவதாகவும், இந்தப் பெறுமதி 83.3 PM2.5 ஆக அமைந்துள்ளது.
இந்த வளி மாசடைதலை குறைப்பதில் வாகன புகைப் பரிசோதனைத் திட்டம் பங்களிப்பு வழங்குகின்றது. பெருமளவான வாகனங்களுக்கு இந்தப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில், இவற்றினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் கண்களுக்கு புலப்படாத வளித் தரத்தை சீரான மட்டத்தில் பேணுவது என்பது சவால்கள் நிறைந்த விடயமாக அமைந்துள்ளது.
வாகனப் புகைப் பரிசோதனையின் முக்கியத்துவம் தொடர்பில் சகல வாகன உரிமையாளர்களும் புரிந்து செயலாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாக அமைந்துள்ளது. இந்த பரிசோதனையினூடாக அவர்களின் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படுவதுடன், எரிபொருள் செலவைக் குறைத்துக் கொள்ள, நகரங்களில் வளித் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் பங்களிப்பு வழங்குகின்றது.
வளி மாசடைவு என்பது அமைதியான உயிர் கொல்லியாக இனங்காணப்பட்டுள்ள போதிலும், உயிர்களைக் கொல்வதில் பங்களிப்பு வழங்குகின்றது. வளி மாசடைவதை குறைப்பதில் இந்த வாகன புகைப் பரிசோதனை பங்களிப்பு வழங்குவதுடன், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 minute ago
23 minute ago
33 minute ago