Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 04 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
39 ஆவது வருடாந்த மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2024 போட்டிகளில் SLT-MOBITEL அணி சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வு அண்மையில் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் மூன்று தினங்கள் நடைபெற்றது.
அதிகம் போட்டிகரமானதாக அமைந்திருந்த இந்த சம்பியன்ஷிப் போட்டிகளில், SLT-MOBITEL மெய்வல்லுநர் அணி சுமார் 50 கூட்டாண்மை நிறுவனங்களைச் சேர்ந்த 2500 க்கும் அதிகமான போட்டியாளர்களுடன் போட்டியிட்டிருந்தது. சிறந்த திறன்கள், அர்ப்பணிப்பு மற்றும் குழுநிலைச் செயற்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தி SLT-MOBITEL அணி பல விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றிருந்தது.
ஆண்கள் பிரிவில் இரண்டாமிடம், Best Athlete Novices Men மற்றும் Best Athlete Over 40 Men ஆகிய கௌரவிப்புகளையும் பெற்றுக் கொண்டிருந்தது. இந்த சாதனைகளினூடாக SLT-MOBITEL அணியின் கடின உழைப்பு, விளையாட்டு பண்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன உறுதி செய்யப்பட்டு, ‘Together, we can win’ எனும் தமது தொனிப்பொருளையும் பிரதிபலித்திருந்தது.
வியாபாரத்தில் சிறப்பை கொண்டிருப்பதற்கான நிறுவனத்தின் உறுதிமொழியை மாத்திரமன்றி, அதன் கூட்டாண்மை கலாசாரத்தின் சகல பிரிவுகளையும் வெளிப்படுத்துவதாக இந்த சாதனை அமைந்துள்ளதுடன், குழுநிலை செயற்பாடு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான பணி-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றை கட்டியெழுப்புவதில் விளையாட்டு வகிக்கும் முக்கிய நிலையை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது. இந்த உயர் மட்ட நிகழ்வில் SLT-MOBITEL இன் வெற்றிகரமான செயற்பாட்டினூடாக, தமது ஊழியர்கள் மத்தியில் விளையாட்டுத் திறன் மற்றும் மெய்வல்லுநர் திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வருடாந்த வர்த்தக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் என்பது இலங்கையின் கூட்டாண்மை விளையாட்டு நாட்காட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளதுடன், நாட்டின் முன்னணி நிறுவனங்களின் சிறந்த மெய்வல்லுநர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் உள்ளது. மேலும், வர்த்தக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2024 என்பது உத்தியோகபூர்வமாக கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், உலக மெய்வல்லுநர் நாட்காட்டியிலும் உள்வாங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
29 minute ago
39 minute ago