2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வயது முதிர்ந்து செல்லும் பெண்களுக்கு இலங்கை கைகொடுக்குமா?

Gavitha   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

சர்வதேச முதியோர் தினம் கடந்த வாரம் பரந்தளவில் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு, வங்கிகளும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் ஊடகங்கள் வாயிலாக, முதியோர்களுக்காக வழங்கப்படும் விசேட நிதித் திட்டங்கள் பற்றிய விளம்பரங்களை வெளியிடுகின்றமை வழமையாக அவதானிக்க முடிகின்றது. ஆனாலும், இலங்கையில் வயது முதிர்வடைந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. இதனால், பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட சனத்தொகைச் சவால்கள் எழுந்த வண்ணமுள்ளன. இலங்கையில் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, ஆண்களின் ஆயுள் எதிர்பார்ப்பை விட, ஏழு வருடங்கள் அதிகமாக அமைந்துள்ளது. இந்நிலையில் வயது முதிர்வடைந்து செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்க வலுச்சேர்க்கும் வகையிலான கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டிய தேவை நிலவுகின்றது.

ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சனத்தொகை வேகமாக முதிர்ச்சி யடைந்த வண்ணமுள்ளது. 1980 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகை துரிதமாக அதிகரித்த வண்ணமுள்ளதுடன், 1981ஆம் ஆண்டு முதல் 2012ஆம் வரையிலான காலப்பகுதியில், 60வயது க்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 6.6 சதவீதத்திலிருந்து 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில், ஐந்தில் ஓர் இலங்கையர் 60வயதுக்கும் மேற்பட்டவராக காணப்படுவரென, உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட வர்கள் பிரிவிலும், அதிகளவு பெண்கள் காணப்படுவர். ஆண்களின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 72 ஆண்டுகளாக அமைந்துள்ளதுடன்,பெண்களின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 79ஆண்டுகளாக அமைந்துள்ளமை இந்த நிலைக்குப் பங்களிப்பு வழங்கும் காரணியாக அமைந்திருக்கும்.

பிறப்பு மற்றும் இறப்பு வீதங்களில் வீழ்ச்சியுடனான சூழலில், ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரித்துச் செல்லும் நிலையில், இந்த வயதுப்பாலின கட்டமைப்பு மாற்றம் ஏற்படுவதில் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றன. இலங்கையில் மாத்திரமன்றி, இந்த நிலையை உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் அவதானிக்க முடிகின்றது. எவ்வாறாயினும், அபிவிருத்தியடைந்து வரும் நாடு எனும் வகையில், பெண்களுக்கு மேலும், பல சவால்கள் சமூகத்திலும் பொருளாதார ரீதியிலும் காணப்படுகின்றன.

எனவே, இலங்கையில் வயது முதிர்ந்து செல்லும் சனத்தொகையினர் எதிர்கொள்ளும் பெரும்பா லான பிரச்சினைகள் மற்றும் வேறுபாடுகள் குறித்து கவனம் செலுத்தும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அவசியமாக அமைந்துள்ளன. நிலைபேறான அபிவிருத்திக்கு வயது முதிர்ந்த சமூகத்தாரும் பங்களிப்பு வழங்குபவர்கள் என கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். வயது முதிர்வடைந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுவதுடன், அவர்களின் வயதுக்கேற்ப நலனை உறுதி செய்து கொள்வதற்கான உதவிகளும் அவசியமாகின்றன.

இந்த நிலை சில சுகாதார சிக்கல்களும் உள்ளடங்கியு ள்ளன. குறிப்பாக, வயது முதிர்ந்த பெண்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான விசேட திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட வேண்டி யுள்ளன. இளம் பராயம் முதல் வயது முதிர்வடைந்த நிலை வரை சகாயமான மற்றும் போதியளவு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை கொண்டிருப்பதனூடாக, வயது முதிர்வடைந்த பெண்கள், ஆரோக்கியமாக திகழ்வதற்குப் பங்களிப்பு வழங்க முடியும். ஒரு பெண், தாய் எனும் நிலையை எய்தும் வரையில் அவர்களுக்குச் சிறந்த சுகாதார பராமரிப்பு வசதிகளை பெற்றுக் கொள்ளும் வசதிகள் இலங்கையில் காணப்படுகின்றன.

ஆனாலும், அதன் பின்னரான நிலைகளில் பாலின அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை இழந்துள்ளன. வயது முதிர்ந்த பெண்களின் இந்த குறிப்பிட்ட தேவைகளை உணர்ந்து, சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குநர்கள் தாம் பின்பற்றும் சேவை வழங்கல்களை மீளமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளில், வயது முதிர்ந்த பெண்களுக்கு வீட்டுப் பராமரிப்பு அடிப்படையிலான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். வயது முதிர்வடைந்து செல்லும் சனத்தொகை அதிகளவு காணப்படுவதன் காரணமாக, வயது முதிர்ந்த நபர் ஒருவரை பராமரிக்கக் காணப்படும் இளம் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுவதுடன், இதன் காரணமாக, இவர்களைப் பராமரிப்பதற்கான செலவீனம் அதிகரித்துக் காணப்படுகின்றது. மெதுவான பொருளாதார வளர்ச்சிச் சூழலில், இந்த நிலை சவாலானதாக அமைந்துள்ளது. வயது முதிர்ந்த பெண்களுக்கு தரமான வாழ்க்கையை முன்னெடு ப்பதற்கு உறுதியான கொள்கைச் செயற்றிட்டங்கள் இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளன.

தற்போது பணியாற்றும் நிலையிலுள்ள பெண்களு க்கு உதவிகளை வழங்குவது முக்கியமானதாக அமைந்துள்ளது. அதனூடாக, தமது பணியாற்றும் காலப்பகுதியில் பெண்களுக்கு நிலையான வருமான த்தைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன், தமது ஓய்வு காலத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். இதனால், வயது முதிர்வடைவதால் எழக்கூடிய சவால்களை தணித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இலங்கையில் இலவசக் கல்வி காணப்பட்ட போதிலும், மொத்தப் பெண்கள் சனத்தொகையில் 34 சதவீதமானவர்கள் மாத்திரமே முறைசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிள்ளைகள் வளர்ப்பு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் வயது முதிர்ந்தவர்களைப் பராமரித்தல் போன்ற அவர்களின் முக்கியமான பங்களிப்புகளுக்கு நிதியளவில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல பெண்கள், முதிர்வடைந்ததும், நிதி சுயாதீனத்தை எய்துவதற்கு பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். ஓய்வூதியம், ஊழியர் நம்பிக்கை மற்றும் சேமலாப நிதியம் மற்றும் காப்புறுதித் திட்டங்கள் போன்றன; இந்தப் பெண்களை சென்றடைவதில்லை அல்லது அவர்கள் மத்தியில் மட்டுப்படுத்தப்பட்டளவு தாக்கத்தையே கொண்டுள்ளன. இதனால், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுப்பதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, இலங்கையின் நிலைபேறான வளர்ச்சிக்கு இந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .