2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

“லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022” அறிமுகம்

S.Sekar   / 2022 ஜனவரி 31 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் கம்பனியின் துணை நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 2022 மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பெறுமதி வாய்ந்த ஸ்மார்ட் சாதனங்களை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் தெரிவை கொண்டுள்ள இந்த ஊக்குவிப்புத் திட்டம் ஜனவரி 1ஆம் திகதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2022 மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக, ஆகக்குறைந்தது ரூ. 15000 மாதாந்த தவணைக் கட்டணத்துடன் (காலாண்டுக்கு ரூ. 45000, அரையாண்டுக்கு ரூ. 75000.00) காப்புறுதித் திட்டத்தை ஆரம்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பெறுமதி வாய்ந்த பரிசுகளை வெற்றியீட்டும் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 ஐ அறிமுகம் செய்வதையிட்டுநாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட லைஃவ் ஸ்டைல் போனஸ் திட்டங்களைப் போன்று, எமது புதிய காப்புறுதிதாரர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளை வெகுமதியாக வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம். வாழ்க்கைமுறைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உறவுகளை நாம் பேணுவதுடன், தயாரிப்பு பிரிவு சுகாதாரம், ஓய்வூதியம், கல்வி மற்றும் முதலீடு போன்றவற்றைக் கொண்டுள்ளோம். எமது புதிய காப்புறுதிதாரர்களின் வாழ்க்கை முறைகளை வளமூட்டுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 இனால் வழங்கப்படும் பரிசுகளில் முதல் பரிசாக iPhone 13 Pro Max 512GB வழங்கப்படவுள்ளதுடன், iPad Air 2021 with Apple Pencil 2nd Gen & Magic Keyboard, Smart TVs, i5 11th Generation laptops, A-series smartphones மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் வவுச்சர்கள் போன்றன வழங்கப்படவுள்ளன.

பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 அறிமுகத்துடன், எமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கி அவர்களுக்கு பெறுமதியை அதிகரித்துள்ளோம். இந்த வெகுமதிகள் காப்புறுதிதாரருக்கு மாத்திரமன்றி, முழுக் குடும்பத்துக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், பிரத்தியேகமான வாடிக்கையாளர் அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும்.” என்றார்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால், யூனியன் அஷ்யூரன்ஸ் போட்டி பதிவு WP/GT/5609 ஆக காணப்படுகின்றது. இதனூடாக, அரசாங்கத்தினால் சட்ட ரீதியில் இந்தப் போட்டிக்கான அனுமதி பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .