2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

லுமாலா-ZeroPlastic முன்னெடுப்பின் புத்தாண்டு 2024 நிகழ்வு

Freelancer   / 2024 மே 06 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்மார்ட் போக்குவரத்து மற்றும் சூழல் நட்பான சேவைகளையும், தீர்வுகளையும் வழங்கும் லுமாலா என அறியப்படும் சிட்டி சைக்கிள் இன்டர்ட்ரீஸ் மெனுபக்ஷரிங் (பிரைவட்) லிமிடெட், விகாரமகாதேவி பூங்காவில் அண்மையில் முன்னெடுத்திருந்த ZeroPlastic முன்னெடுப்பு புத்தாண்டு நிகழ்வின் பிரதான அனுசரணையாளராகத் திகழ்ந்தது.

இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றிருந்ததுடன், இந்த ஆண்டின் தமிழ், சிங்கள புத்தாண்டை வரவேற்கும் வகையில், கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். நிகழ்வின் விசேட அம்சமாக, ஒற்றைப் பாவனை பிளாஸ்ரிக் பொருட்கள் எதுவும் இந்த நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஏனையவர்களுக்கு முன்மாதிரியான செயற்பாடாக இது அமைந்திருந்தது. சூழல் நிலைபேறாண்மைக்கான திரண்ட அர்ப்பணிப்புடன், இந்த நிகழ்வின் போது, பாரம்பரியம் மற்றும் சூழல்-அக்கறை ஆகியன இணைந்ததாக கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன. ஏனைய வைபவங்களுக்கும் முன்மாதிரியானதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

பாரம்பரிய விளையாட்டுகள் முதல் கலாசார செயற்பாடுகள் வரை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒவ்வொரு அம்சமும் நிலைபேறாண்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. திரண்ட முயற்சிகளினூடாக, லுமாலா மற்றும் ZeroPlastic முன்னெடுப்பு இணைந்து, கொண்டாட்ட வைபவங்கள், புவிக்கு நட்பான வகையில் முன்னெடுக்கப்படக்கூடியதை வெளிப்படுத்தியிருந்தன.

பகிரப்பட்ட பொறுப்புக்கூரலுக்கான ஆதாரமாக பங்குபற்றுநர்களின் நேர்த்தியான மனநிலை அமைந்திருந்ததுடன், நிலைபேறான தீர்வுகளை பின்பற்றுவதற்கான முன்வருகையும் அமைந்திருந்தது.

ZeroPlastic முன்னெடுப்பு என்பது, இலங்கையின் மாபெரும் சூழல்சார் தன்னார்வ அமைப்பாக திகழ்வதுடன், விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளினூடாக நபர்களுக்கு வலுவூட்டுகின்றது. பல்கலைக்கழகங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றிலிருந்து 10,000க்கும் அதிகமான தன்னார்வ செயற்பாட்டாளர்களைக் கொண்டுள்ளதுடன், கல்வியறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளினூடாக பிளாஸ்ரிக் மாசுகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

லுமாலா தனது சைக்கிள் தெரிவுகளையும், அண்மையில் அறிமுகம் செய்திருந்த Eco Hauler e-bikes களையும் இந்த நிகழ்வுகளில் ஈடுபடுத்தியிருந்தது. அதன் e-bikeகள், நிறுவனங்கள், அரச ஸ்தாபனங்கள் மற்றும் பல அமைப்புகள் மத்தியில் தற்போது அதிகளவு கேள்வியைக் கொண்டிருப்பதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு அனுகூலங்களை வழங்கக்கூடிய சூழல்சார் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு, நேர்த்தியான சூழல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு கைகோர்ப்புகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .