Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Janu / 2024 ஜூலை 18 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெப்றி பாவா அவர்களின் தோட்டத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற Lunuganga நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது பருவகாலமானது 2024 ஜுலை 11 முதல் 14 வரையான காலப்பகுதியில் ஜெப்றி பாவா அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் 1ஆம் மற்றும் 2ஆம் பருவகாலங்களாக அமைந்த பன்னிரண்டு மாத காலப்பகுதியில், “nature and the natural,” “empathy through ecology,” “access beyond language,” மற்றும் “garden as lens” ஆகியன தொனிப்பொருளில் தொடர் பல்குரல் செயற்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. Lunuganga வில் இரு புதிய தாபிப்புக்கள் அடங்கலாக, கொழும்பு மற்றும் பெந்தோட்டையில் தொடர் நிகழ்வுகளுடன் மூன்றாவதும் இறுதியுமான பருவகாலத்தை இந்த அறக்கட்டளை வரவேற்றுள்ளது.
1959 மற்றும் 1961 க்கிடையில் ஜெப்றி பாவா அவர்களால் வடிவமைக்கப்பட்ட Kannangara House என்ற அறக்கட்டளையின் புதிய அலுவலகத்தின் திறப்புவிழா நிகழ்வுடன் வாரஇறுதி கொழும்பில் ஆரம்பமானது. தலைவர் சண்ண தஸ்வத்த விருந்தினர்களை அவ்விடத்திற்கு வரவேற்றதுடன், பிரதம மேற்பார்வையாளர் ஷயாரி டி சில்வா பதினெட்டு மாத கால நிகழ்ச்சித்திட்டத்தின் இது வரையான முன்னேற்றங்களையும், மூன்றாவது பருவகாலத்திற்கான முன்னோட்டத்தையும் வெளிப்படுத்தினார்.
மேற்பார்வையாளர் அனீஷா மஸ்டாச்சி அதன் பின்னர் Kannangara House இன் முதல் தாபிப்பான Tree Talks செவிமடுத்தல் அறையை அறிமுகப்படுத்தியதுடன், புதிதாக வெளிவந்துள்ள Garden Rhythms அடங்கலாக அனைத்து podcast பதிப்புக்களையும் வெளிக்காண்பித்திருந்தார். பிரதம தோட்டவியலாளர் முல்லே விதானலாகே அமரசிறி தோட்டத்தின் தனித்துவமான அழகினை வர்ணிக்கும் விசேட பதிப்புடன், நேர்காணல் ஒன்றையும் வழங்கியிருந்தார்.
ஜுலை 13, சனிக்கிழமை ஜெப்றி பாவா அறக்கட்டளை மற்றும் எனா டி சில்வா பவுண்டேஷன் ஆகியன இணைந்து Botany and Batik: the Living Archives of Ena de Silva என்ற புதிய தாபிப்பினை திறந்து வைத்துள்ளன. ஜெப்றி பாவா அவர்களால் வடிவமைக்கப்பட்டு, முன்னர் எனா டி சில்வா அவர்களின் இல்லமாக அமைந்திருந்ததுடன், அதனைத் தொடர்ந்து 2017 இல் பெந்தோட்டையில் தனித்துவமான காப்பகத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட லுணுகங்கையின் 05ஆம் இலக்க அமைவிடத்தில் இது தாபிக்கப்பட்டுளள்ளது.
இயற்கை உலகு மற்றும் அவரது புடவை நடைமுறையின் அதன் செல்வாக்கு தொடர்பாக டி சில்வா அவர்களாக மிகக் கவனமாகத் திட்டமிட்டு ஆவணப்படுத்தப்பட்ட காப்பகத்திலிருந்து Botany and Batik: the Living Archives of Ena de Silva உதயமாகியுள்ளதுடன், அவரது புதல்வரான ஓவியர் காமினி ஜெயசூரிய அவர்களின் ஓவியங்களையும் இது கொண்டுள்ளது. உலோக வேலைப்பாடு கலைஞரான சலோமி நாணயக்காரவினால் அவரது சூழலியல் நலன்களை கலை ரீதியாக வழங்குவதன் மூலம் இந்த தாபிப்பு ஜெயசூரியவின் நினைவை கௌரவித்தது.
ஜுலை 14, ஞாயிற்றுக்கிழமையன்று தேய்காய் மணிகள், பூஞ்சையால் முற்றிய பலாப்பழம் மற்றும் ஐந்தூரியம் பூவின் மணிகள் அடங்கலாக தோட்டமெங்கும் கண்டெடுத்த இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Saudade: The Haunting Presence of Prince Dorovana என்பதை ஓவியர் சத்துரி நிசன்சலா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். நிசன்சலா அவர்கள் Prince Claus Fund Seed Awards விருதுகள் நிகழ்வின் அங்கமாக முன்னர் லுணுகங்கை தோட்டத்தில் நேரலை நிகழ்ச்சியொன்றை படைத்திருந்ததுடன், 2023 டிசம்பரில் அவர் இவ்விருதைப் பெற்ற சமயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இரு ஆண்டுகள் கொண்ட நிகழ்ச்சித்திட்டமாக நுண்கலைகளில் உலகளாவிய திறமைசாலிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ள அம்ஸ்டர்டாம் மாநகரைத் தளமாகக் கொண்ட Rijksakademie van BeeldendeKunstenஇல் வதிவிட பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிற்காக நிசன்சலா அவர்கள் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டெம்பரில் அவர் இதில் இணைந்து கொள்வார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒத்துழைப்புடனான செயற்திட்டமான The Order of Nature இன் சமீபத்தைய வரவாக அவரது தாபிப்பு அமைந்துள்ளது. இதற்கான முதற்பங்களிப்பாக ஷேனுக கொரயா அவர்களின் மடிப்பு மர பேனல்களில் வரையப்பட்ட zine மற்றும் இரட்டை பக்க triptych இடம்பெற்றுள்ளது. ஜெப்றி பாவா அறக்கட்டளையின் சிரேஷ்ட வடிவமைப்பு மற்றும் தொடர்பாடல்கள் முகாமையாளர் திலினி பெரேரா அவர்கள், The Order of Nature இன் படைப்பாளராக Prince Claus Fund நிதியத்தின் துணையுடன் 2023 டிசம்பரில் படைப்பாக்க செயற்திட்டமொன்றில் கால்பதித்திருந்தார்.
நிசன்சலா மற்றும் பெரேரா ஆகியோர் தோட்டத்தின் மாற்றுச் சுற்றுப்பயணத்திற்கு வழிகாட்டினர், அது கட்டடக்கலை கூறுகளிலிருந்து விலகி, அதற்கு பதிலாக வினோதமான சொற்பொழிவு மற்றும் சூழலியல் தளமாக அதை ஆய்வு செய்தது. ஓவியர் ஃபிரி ரஹ்மான் அவர்களும் In between: the existence of Firdaus என்ற தனது தாபிப்பை சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். 2023 டிசம்பர் முதல் லுணுகங்கையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இது, 2024 பெப்ரவரியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்தகைய அளவில் தன்னுடைய முதலாவது வெளிப்புற தாபிப்பின் எண்ணக்கருவின் படைப்பாற்றல் நடைமுறை மற்றும் அனுபவம் குறித்து ரஹ்மான் அவர்கள் உரையாடியதுடன், இத்தோட்டத்தின் மாறும் சூழலுடன் பரிணாம வளர்ச்சி குறித்தும் விளக்கினார். இந்த இந்த சுற்றுலா நிகழ்வுகளும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்றன.
சனிக்கிழமை மாலையில் சூரிய அஸ்தமனம் நெருங்கிய சமயத்தில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும், நடனக் கலைஞரும் மற்றும் நடன ஆசிரியருமான ரவிபந்து வித்யாபதி அவர்கள் மேடையை அலங்கரித்தார். 2004 இல் முதன்முதலாக திரையிடப்பட்ட லுணுகங்கை பற்றிய Salt River என்ற முதலாவது திரைப்படத்தின் பாடல்களை வித்யாபதி அவர்கள் இசையமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகள் கழிந்த பின்னர், இந்த இசைக்கு மீள்வடிவம் கொடுக்கும் உத்வேக முயற்சியை வித்யாபதி அவர்கள் இவ்விடத்தில் மேற்கொண்டதுடன், பல்வாத்தியங்களின் தொகுப்பும், திரைப்படத்தின் காட்சிகளும் மேடைக்கு உயிரோட்டமளித்தன.
சூரிய அஸ்தமன cocktail மணிப்பொழுதில் கொழும்பு உணவகமான GINI வழங்கிய, லுணுகங்கையின் மலர்களை உபயோகித்து தயாரிக்கப்பட்ட பான வகைகளை விருந்தினர்கள் சுவைத்து மகிழ்ந்தனர். வெளிப்புறத்தில் தீமூட்டி சமைப்பதற்கு பெயர்பெற்ற தோட்டத்திலுள்ள உணவகத்தில், லுணுகங்கையின் புத்தாக்கமான உணவு வகைகள் அங்கேயே பெறப்பட்ட சேர்க்கைப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன. மறு நாளில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சுற்றுலா அடிப்படையிலான உணவுப் பட்டியலை GINI அறிமுகப்படுத்தியிருந்ததுடன், பகல் பொழுதில் விருந்தினர்கள் உணவுகளை சுவைத்து மகிழ்ந்த வேளையில், ருவின் டி சில்வா அவர்கள் தோட்டத்தின் சூழலுக்கு உகந்தவாறு விசேடமாக தொகுக்கப்பட்ட டிஜே இசையை வழங்கினார். Rockland Distilleries நிறுவனம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது மது வகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சுற்றுலா தருணத்திற்கு உகந்த ஜின் அடிப்படையிலான cocktails பானங்களை பரிமாறியது. தொடர்ந்து, ஜெப்றி பாவா அறக்கட்டளையின் இளைஞர் ஆலோசனைச் சபை, லுணுகங்கையை மையமாகக் கொண்ட கதைகள், இனங்கள் மற்றும் தாபிப்புக்களைக் கொண்ட தொடர்ச்சியான நோக்கங்கள் மூலம் தோட்டத்தை ஆராய பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலில் வடிவமைக்கப்பட்ட தோட்டி வேட்டைக்கு அனுசரணை வழங்கியது.
To Lunuganga3வது பருவகாலத்தின் ஆரம்பம், அக்கிலா பீரிஸ், சத்துரி நிசன்சலா, கலாநிதி டனிஸ்டர் பெரேரா, எனா டி சில்வா அறக்கட்டளை, ஃபிரி ரஹ்மான், கிஹான் டி சில்வா விஜேரத்ன, GINI Outdoor Kitchen, சலோமி நாணயக்கார, சஞ்சீவ விஜேசுந்தர, ஷேனுக கொரயா, மற்றும் ரவிபந்து வித்யாபதி உள்ளிட்டவர்களின் உள்நாட்டு தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வலியுறுத்தியது. ஹொங்கொங்கைத் தளமாக கொண்ட M+ என்ற அருங்காட்சியகத்தின் காப்பாளர் குழு அடங்கலாக, உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான விருந்தினர்களை இந்நிகழ்வு ஈர்த்துள்ளது.
To Lunuganga3வது பருவகாலம் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள தயவுசெய்து www.lunuganga.gardenஎன்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.
படைப்பாளர் அணி: ஷயரி டி சில்வா, அனீஷா மஸ்டாச்சி, திலினி பெரேரா, ஷானிகா பெரேரா, சத்திரா இமாதுவகே, ஈசா ஸ்பொயரி, சரீனா உசைன், தராக்கி பஹத்கும்புர, மிஷேல் ஜத்தின் ஜோர்ஜ், ஃபஸாத் உவைஸ், சந்திக குணசேகர, மற்றும் ரொஹான் சத்துரங்க.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago