Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 மே 27 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
E.B. Creasy அன்ட் கம்பனி பிஎல்சியின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (லங்கா SSL), தனது அவன்தியா, டார்கெட், சக்தி மற்றும் வேர்ஜ் ஆகிய அணிகளினூடாக தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து, தரம் மற்றும் உற்பத்தித் திறன் தேசிய மாநாடு (NCQP) 2021 இல் நான்கு விருதுகளை வென்றிருந்தது.
தரம் மற்றும் உற்பத்தித்திறன் முன்னேற்றத்துக்கான இலங்கை சம்மேளனத்தினால் (SLAAQP) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகியின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இதர அதிதிகளாக கலாநிதி. சுனில் ஜயந்த நவரட்ன, சுனில் ஜி விஜேசிங்க மற்றும் SLAAQP இன் தலைவர் விபுல் குலரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் 250 க்கும் அதிகமான அணிகள் இந்நிகழ்வில் பங்கேற்று வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கக்கூடிய பல்வேறு செயற்பாடுகளை வெளிப்படுத்தி போட்டியிட்டிருந்தன. லங்கா SSL இன் நான்கு அணிகளினால் சிறந்த வலிமைகள் மற்றும் பெறுமதிகள் போன்றன இந்தப் பிரிவுகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவர்களின் நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றுக்கு உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
லங்கா SSL சார்பாக போட்டியிட்டவர்களில் மதுசங்க, சாமர, கோசல மற்றும் தினேஷ் (அவன்தியா அணி), நிப்ரான், சுசந்த மற்றும் ஒஷான் (டார்கெட் அணி), அமித், பிரேமரட்ன மற்றும் ஜி. ரி. மதுசங்க (சக்தி அணி) மற்றும் சாகர, சுப்புன், கிஹானி, அசங்க, கசுனி மற்றும் சச்சினி (வேகர் அணி) ஆகியோர் அடங்கியிருந்தனர்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்பாடு செய்யப்படும் மாநாடுகளில் பங்கேற்பதில் சிறந்த பதிவுகளை லங்கா ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் கொண்டுள்ளது. எமது பெறுமதி வாய்ந்த ஊழியர்கள் காண்பித்திருந்த அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு தொடர்பில் நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். குறிப்பாக விற்பனைப் பகுதிகளின் கள நிலைகளிலிருந்து, ஆற்றும் பங்களிப்புகள் தமது உயரதிகாரிகளுடன் ஒன்றிணைந்து பங்காற்றுவதனூடாக உற்பத்தித் திறன் அதிகரிப்புக்கு ஏதுவாக அமைந்திருந்தன.
இந்த மாநாட்டில் நான்கு விருதுகளை வெற்றியீட்டியுள்ளமை என்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டும் என்பதுடன், நாம் பெருமையும் கொள்ள வேண்டிய விடயமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஒரு தங்க விருதை மாத்திரம் வெற்றியீட்டியிருந்த நிலையில், இந்த ஆண்டில் நாம் எய்திய சாதனைகள் மிகவும் பாரிய விடயமாக அமைந்துள்ளது.” என பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரவீன் டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் SLS சான்றிதழைப் பெற்ற ஒரே hot-dipped galvanized (Gi) கம்பிகள் மற்றும் barbed கம்பிகள் உற்பத்தியாளரான லங்கா SSL, அதன் தரம், புத்தாக்கம் மற்றும் சிறப்புக்காக தொடர்ச்சியாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில், தேசிய வியாபார சிறப்புகள் 2021 இல் பாரிய பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், உற்பத்தி - ஏனைய பிரிவில் வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில், மிகப் பெரிய பிரிவு – தேசிய தங்க விருதை (உற்பத்தித் துறை) பெற்றுக் கொண்டதுடன், தொழிற்துறை சிறப்புக்கான CNCI சாதனையாளர் விருதுகள் 2020 இல் சிறந்த பத்து விருதை சுவீகரித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago