2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ரொடுன்டா டவர்ஸில் SLT-MOBITEL புதிய வாடிக்கையாளர் சேவை நிலையம் திறப்பு

S.Sekar   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தனது முதலாவது drive-through வசதியுடனான வாடிக்கையாளர் சேவை நிலையத்தை ரொடுன்டா டவர்ஸில் திறந்துள்ளது.

இல. 109, காலி வீதி, கொழும்பு 3 எனும் முகவரியில் அமைந்துள்ள ரொடுன்டா டவர்ஸில், நிறுவப்பட்டுள்ள இந்த சேவை நிலையத்தை SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் SLT குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென, SLT பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க, மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத் மற்றும் SLT-MOBITEL இன் சிரேஷ்ட முகாமைத்துவ அணியினர் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தனது பிரசன்னத்தை மேம்படுத்துவதுடன், நிலையான, மொபைல் மற்றும் PEO TV சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் SLT-MOBITEL இன் பரந்தளவு திட்டத்தின் அங்கமாக இந்த புதிய சேவை நிலையத்தின் திறப்பு அமைந்துள்ளது. புரட்சிகரமான நவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்த புதிய கிளையினால் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படுவதுடன், SLT-MOBITEL வாடிக்கையாளர்களுக்கு தமது சகல விதமான இணைய இணைப்புத் தேவைகளையும் சிக்கல்களற்ற வகையில் இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது.

இந்தக் கிளையில் காணப்படும் பிரத்தியேகமான உள்ளம்சமாக, வாடிக்கையாளர்களுக்கு தமது வாகனங்களில் இருந்தவாறே சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய drive-through வசதி முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தன்னிறைவு மற்றும் சௌகரியத்தை மேம்படுத்துவம் வகையில் இந்தக் கிளை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிலையத்தினூடாக ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலும் வாடிக்கையாளர்கள் விஜயம் செய்து web portal இல் தமது கோரிக்கைகளை பதிவு செய்ததும், அடுத்து வரும் வேலைநாளில் அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கு புதிய இணைப்புகளை அனுப்பி வைக்கும் சேவையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கிளையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்யப்படுவதை இவர்கள் உறுதி செய்வார்கள். SLT- MOBITEL தொடர்ந்தும் நிலையான மற்றும் மொபைல் தொலைத்தொடர்பாடல் பிரிவில் முன்னிலையில் திகழ்வதுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவங்களை சகல இலங்கையர்களுக்கும் வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .