2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ராகம Melsta வைத்தியசாலைக்கு IMS தரப்படுத்தல்

S.Sekar   / 2021 மார்ச் 10 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெல்ஸ்டாகோர்ப் பிஎல்சியின் துணை நிறுவனமான Melsta ஹெல்த்தின் அங்கமான ராகம Melsta வைத்தியசாலை, இலங்கையின் முதலாவதும் ஒரே பரிபூரண ஒன்றிணைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பு (IMS) தரப்படுத்தலைப் பெற்ற வைத்தியசாலையாக அமைந்துள்ளது. அத்துடன் ISO 9001 :2015, ISO 22000:2018, ISO 14001:2015 மற்றும் ISO 45001:2018 ஆகிய நான்கு தரப்படுத்தல்களையும் கொண்டுள்ளது.

குறுகிய காலப்பகுதியில், Melsta ஹெல்த் நிர்வாகத்தினால் இயலுமான வகையில், தரத்துக்கு முக்கியத்துவமளித்து மற்றும் செயன்முறையினடிப்படையில் இயங்கும் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடிந்துள்ளதுடன், தமது நோக்கமான சமூகப் பொறுப்புடன் செயலாற்றல் என்பதற்கமைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர். கே. தியாகராஜா இறைவன் கருத்துத் தெரிவிக்கையில், “உலகத் தரம் வாய்ந்த தரமான சுகாதார பராமரிப்பு வசதிகளை பரிபூரணமான வகையில் நாட்டு மக்களுக்கு இயலுமானவரையில் பெற்றுக் கொள்ளும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது எமது இலக்காகும். இந்த IMS கட்டமைப்பினூடாக, எமக்கு எதிர்காலத்தில் பெருமைக்குரிய Joint Commission International (JCI) சான்றைப் பெற்றுக் கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

வைத்தியசாலை தனது வருடபூர்த்தியைக் குறிக்கும் வகையில், தேவையுடைய நோயாளி ஒருவருக்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை ஒன்றை இலவசமாக முன்னெடுத்திருந்தது. பொறுப்பு வாய்ந்த வைத்தியசாலை எனும் வகையில், வெளிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சைகள், சத்திர சிகிச்சைகூடக் கட்டணங்கள் மற்றும் அறைக் கட்டணங்கள் போன்ற பல மருத்துவ வசதிகளின் கட்டணங்களைக் குறைத்திருந்தது. இன்றைய காலகட்டத்தில் ராகம Melsta வைத்தியசாலை நாட்டிலுள்ள வேகமாக வளர்ந்து வரும் சுகாதார பராமரிப்பு சேவை வழங்குநராக திகழ்கின்றது. இந்த வைத்தியசாலை பல்வேறு உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், வளங்கள் மற்றும் தர மேம்படுத்தல்கள் போன்றவற்றில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் ரஞ்ஜன குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “IMS இனால் வைத்தியசாலையின் செயற்பாடுகளை ஒரு தொகுதி கொள்கைகள் மற்றும் செயன்முறைகளுடன் ஒன்றிணைத்துள்ளதால், உயர் தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தல்களை எய்துவதற்கு உதவியாக அமைந்திருக்கும். எமது வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் தொடர்ச்சித் தன்மையான சேவைகளைப் பெற்றுக் கொடுக்க இவை உதவியாக அமைந்திருப்பதுடன், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை எமது திறமை படைத்த மற்றும் கடுமையாக உழைக்கும் ஊழியர்கள் மத்தியில் பேணக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

வைத்தியசாலையில் சிறந்த நவீன வசதிகளுடனான சத்திர சிகிச்சை கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர பிரிவு மற்றும் Melsta Labs இனால் நிர்வகிக்கப்படும் ஆய்வுகூட வசதிகள் போன்றன காணப்படுகின்றன. இந்த ஆய்வுகூடத்தினால் 4000 க்கும் அதிகமான வேறுபட்ட பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கு நவீன வசதிகள் வசதிகள் படைத்த MRI, CT மற்றும் இதர கதிரியக்க சிகிச்சை சேவைகள் போன்றன காணப்படுவதுடன், நோயாளர்களுக்கு துல்லியமான நோய் இனங்காணல் பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மெருகேற்றங்களின் போது என்டோஸ்கொபி இயந்திரங்கள், புதிய ட்ரான்ஸ்பிளான்ட் மற்றும் யுரோலொஜி சாதனம், புதிய சிறுநீரக மாற்று தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நவீன வசதிகள் படைத்த gastroenterology நிலையமொன்றையும் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .