2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

யூனியன் வங்கியின் தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

Freelancer   / 2025 ஜனவரி 24 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி தனது Union Bank School of Social Entrepreneurship இன் முக்கிய மைல்கல் சாதனையாக தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை (NEDP) அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  

2025 ஆம் ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளதுடன், மொரட்டுவ பல்கலைக்கழகம் (UoM) மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு (NIA) ஆகியவற்றுடன் இணைந்து யூனியன் வங்கி இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

2024 டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், கிடைத்த விண்ணப்பங்களிலிருந்து இருநூறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், தற்போதைய வியாபார உரிமையாளர்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொண்ட தொழில்முயற்சியாளர்கள் போன்ற புத்தாக்கமான சிந்தனைகளை கொண்டவர்கள் இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், நிகழ்விலும் பங்கேற்றிருந்தனர்.

ஒன்லைன் விரிவுரைகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் போன்றன இணைந்து இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுவதுடன், வியாபார திரட்சியை கட்டியெழுப்ப அவசியமான பரந்த கற்கையை உள்வாங்கியுள்ளது. வியாபார உரிமையாளர்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தொழில்முயற்சியாளர்கள் போன்றவர்களின் திறன்களை மேம்படுத்தும் மாற்றியமைக்கும் பயணத்தின் ஆரம்பமாக இந்த மைல்கல் நிகழ்வு அமைந்திருந்தது. நிகழ்வின் முக்கிய அங்கமாக, யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்களும் நிகழ்வில் இணைந்து கொண்டதுடன், திட்டத்துக்கு பெருமளவு பெறுமதியை சேர்த்திருந்தனர். ஒன்றிணைந்து, தொழில்முயற்சியாண்மை, புத்தாக்கம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை இலங்கையில் கட்டியெழுப்புகின்றோம்.

யூனியன் வங்கியின் பிரதிநிதிகளுடன் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுக நிகழ்வில் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .