Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 20 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் வங்கி தனது புதிய பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக டில்ஷான் ரொட்ரிகோ அவர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. வங்கியியல் துறையில் இரண்டு தசாப்த காலத்துக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள ரொட்ரிகோவின் நியமனம், வங்கியின் மெருகேற்றிடும் மாற்றத்துக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவரின் தலைமைத்துவத்தின் கீழ், இலங்கையின் முன்னேற்றகரமான வங்கியியல் துறையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு எதிர்பார்ப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் யுகத்தில், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மூலோபாயங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அடையாளமாகத் திகழ்கின்றது.
ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “வங்கியியல் புத்தாக்கம் மற்றும் சேவைச் சிறப்பு ஆகியவற்றில் முன்னிலையில் திகழ்வதற்கு யூனியன் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது. எமது மூலதன வலிமையை பயன்படுத்தி, வளர்ச்சியை எய்துவதுடன், நுகர்வோர் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறைகளுக்கு எமது பிரசன்னத்தை மேம்படுத்துவது போன்றவற்றில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவோம். நாடு முழுவதிலும் காணப்படும் எமது கிளை வலையமைப்பினூடாக நாம் உச்ச பயனைப் பெற்று, எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் எமது டிஜிட்டல் ஆற்றல்களை மாற்றியமைக்கவும் எதிர்பார்க்கின்றோம். யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலை (UBSSE) என்பதனூடாக, நிலைபேறான தொழில்முயற்சியாண்மையை கட்டியெழுப்புவதற்கு யூனியன் வங்கி எதிர்பார்க்கின்றது. நேபாள கோடீஸ்வரரான கலாநிதி. பினோத் சௌத்ரி அவர்களின் வழிகாட்டலில் இயங்கும், யூனியன் வங்கியின் பிரதான பங்காளரான CG Corp Global குரூப்பின் நோக்கத்துடன் பொருந்தியதாக வங்கியின் மூலோபாய முன்னுரிமைகள் அமைந்திருக்கும். இலங்கையின் பொருளாதாரம் அண்மைக் காலத்தில் உறுதித் தன்மையை எய்தி வருகின்றமையானது, யூனியன் வங்கிக்கு அதன் வளர்ச்சி இலக்குகளை எய்துவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தி பொருளாதாரம், பெறுமதி சேர் ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்தல் போன்றவற்றை வலிமைப்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.” என்றார்.
யூனியன் வங்கியின் புதிய பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக ரொட்ரிகோவை வரவேற்று வங்கியின் தவிசாளர் நிர்வாணா சௌத்ரி கருத்துத் தெரிவிக்கையில், “அடுத்த 3 – 5 வருட காலப்பகுதியினுள் இலங்கையின் சிறந்த ஐந்து வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கியை தரமுயர்த்துவதற்கு சிறந்த வகையில் பொருத்தமானதாக தில்ஷானின் அனுபவம் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்புக்கான அர்ப்பணிப்பு போன்றன அமைந்துள்ளன. பங்குதாரர்களுக்கு பெறுமதி சேர்ப்பது மற்றும் எமது மூலோபாய இலக்குகளை பூர்த்தி செய்வது போன்றவற்றில் அவர்களின் தலைமைத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்.” என்றார்.
வங்கியியல், காப்புறுதி, முதலீட்டு வங்கியியல் மற்றும் ஆடைத் தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளிலிருந்து பெருமளவு அனுபவத்தை தில்ஷான் ரொட்ரிகோ கொண்டுள்ளார். அவர் இறுதியாக ஹற்றன் நஷனல் வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக செயலாற்றியிருந்தார். HNB ஃபினான்ஸ் பிஎல்சி மற்றும் லங்கா ஃபினான்ஷியல் பியுரோ ஆகியவற்றின் தவிசாளராகவும், HNB அசூரன்ஸ் பிஎல்சி மற்றும் கார்டியன் அக்குவிட்டி மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளராக இவர் பணியாற்றுவதுடன், இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகம் (SLID) மற்றும் ஏசியன் பாங்கர்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றுக்கும் பங்களிப்பு வழங்கியுள்ளார். ஐக்கிய இராஜ்ஜியத்தின் Cranfield பல்கலைக்கழகத்திலிருந்து MBA பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் (FCMA) மற்றும் பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சம்மேளனம் (FCCA) ஆகியவற்றின் அங்கத்துவத்தையும் பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago