Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் வங்கி தனது புதிய பிரதி தவிசாளராக நிர்வாணா சௌத்ரியை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. முன்னர் பிரதி தவிசாளராக செயலாற்றிய ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே அந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து புதிய புதிய நியமனத்தை வழங்கியுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் முதல் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நிர்வாணா சௌத்ரி திகழ்கின்றார்.
இவர் பல துறைகளில் பிரசன்னத்தைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட பல்தேசிய நிறுவனமான CG Corp Global இன் முகாமைத்துவப் பணிப்பாளராவார். யூனியன் வங்கியின் பிரதான பங்காளராக திகழும் CG Corp Global இன் துணை நிறுவனமான CG Capital Partners, இரு நிறுவனங்களின் மூலோபாய பங்காண்மையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. சர்வதேச வியாபார மூலோபாயம், தலைமைத்துவம் மற்றும் கூட்டாண்மை ஆளுகை ஆகியவற்றில் சௌத்ரியின் பரந்த அனுபவம், நிதித்துறையில் தனது சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கு யூனியன் வங்கிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago