2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

யூனியன் வங்கி Product Power Forum 2025 ஐ ஆரம்பித்துள்ளது

Freelancer   / 2025 மார்ச் 24 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கியின் மாற்றியமைப்பு செயற்பாடுகள் மற்றும் புதிய மூலோபாய நோக்கத்தின் அங்கமாக, ஊழியர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்தும் பணிகளை யூனியன் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. யூனியன் வங்கியின் கிளைகளைச் சேர்ந்த முன்கள ஊழியர்களின் தயாரிப்பு அறிவை மேம்படுத்தும் ஈடுபாட்டு நிகழ்வொன்றை Product Power 2025 எனும் தொனிப்ப பொருளின் கீழ் வங்கி அண்மையில் முன்னெடுத்திருந்தது.

சேமிப்புகள் மற்றும் முதலீடுகள், கடன்கள், கடன் அட்டைகள், அடகுச் சேவைகள், லீசிங், டிஜிட்டல் வங்கிச் சேவை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை பெறுமதி பிரிவுகள் போன்ற பிரதான அம்சங்களை உள்ளடக்கி, வங்கியின் தயாரிப்பு நிபுணர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் முதல் சுற்றில் 200 க்கும் அதிகமான கிளை ஊழியர்கள் பங்கேற்றிருந்ததுடன், ஒன்லைன் தயாரிப்பு புதிர் போட்டி அடங்கலாக பல்வேறு ஈடுபாடுகளுடனான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ உரையாற்றியிருந்தார். தமது உரையில், 2025 ஆம் ஆண்டுக்கான வங்கியின் மூலோபாய நோக்கு மற்றும் இலக்குகள் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்கியதுடன், தொடர்ச்சியான மாற்றத்துக்கு வங்கியின் அர்ப்பணிப்பு மற்றும் ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் விருத்திக்காக ஈடுபாட்டு செயற்பாடுகள் பற்றிய விடயங்கள் அடங்கியிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X