2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

யூனியன் வங்கி 24 மணி நேர துரித வாகன லீசிங் வசதியை அறிமுகம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி அண்மையில் தனது லீசிங் வசதிகளை போட்டிகரமான குறைந்த மாதாந்த வாடகை மற்றும் 24 மணி நேரத்தினுள் வாடிக்கையாளர்களுக்கான அனுமதி போன்ற நெகிழ்ச்சியான அம்சங்களுடன் மீள அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் வாகன தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நெகிழ்ச்சியான மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க லீசிங் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. சந்தையில் காணப்படும் மிகவும் குறைந்த மாதாந்த லீசிங் வாடகைப் பெறுமதியை யூனியன் வங்கியின் லீசிங் வழங்குவதுடன், ரூ. 100,000 க்கு ரூ. 1,689 எனும் குறைந்த தொகை மாதாந்த வாடகையாக அறவிடப்படுகின்றது.

பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, புத்தம் புதிய, ரீகண்டிஷன், இலத்திரனியல் மற்றும் ஹைபிரிட் போன்ற பலதரப்பட்ட வாகனங்களுக்கு லீசிங் வசதிகளை வேகமாகவும் பிரத்தியேகமான முறையிலும் வாடிக்கையாளர்கள் யூனியன் வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். 7 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் திட்டங்களை கொண்டுள்ளதுடன், வாகனப் பெறுமதியின் 90% வரை நிதி வசதிகளை பெற்றுக் கொடுக்கும் தெரிவையும் கொண்டுள்ளது. அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது வாகன எதிர்பார்ப்புகளை நெகிழ்ச்சித் தன்மையுடன் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன் அனுமதியளிக்கப்பட்ட கடனட்டையும் லீசிங் தீர்வின் அங்கமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், அதனூடாக காப்புறுதி கொடுப்பனவுகளை 0% வட்டியில்லா தவணைமுறையில் செலுத்தும் வசதியும், வாகன காப்புறுதிக்கு விசேட ப்ரீமியம்களும் வழங்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் பரந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் யூனியன் வங்கியின் லீசிங் தீர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கூட்டாண்மை, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் நடுத்தரளவு சந்தை வியாபாரங்கள் போன்றவற்றுக்கு வங்கியினால் சேவைகள் வழங்கப்படுவதுடன், முன்அனுமதியளிக்கப்பட்ட லீசிங் வரையறைகளுடன், துரித ஒரு நாள் அனுமதி செயன்முறை போன்றவற்றினூடாக வியாபாரங்களுக்கு ஒப்பற்ற நிதிவசதி பெற்றுக் கொள்ளவும், தமது வாகன தொடரணியை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.

லீசிங் தெரிவுகளுடன் தனது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளதனூடாக புத்தாக்கமான தீர்வுகளுடன் வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதற்கான யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பு மேலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .