Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2023 மே 06 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், தனது கலாசாரப் பெறுமதிகளை கொண்டாடும் வகையில், தனது விளையாட்டு தினத்தை அண்மையில், கொழும்பு விமானப் படை மைதானத்தில் முன்னெடுத்திருந்தது. நிறுவனத்தின் நான்கு விளையாட்டு இல்லங்களும் இந்த நிகழ்வில் போட்டியிட்டிருந்தன. இதன் போது, Challengers அணி சம்பியன்களாக தெரிவாகியிருந்ததுடன், இரண்டாமிடத்தை Giants பெற்றுக் கொண்டது. இந்த விளையாட்டுப் போட்டியில் Titans மற்றும் Royals இல்லங்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “இலக்குகளை எய்துவதற்கான எமது உறுதியான இணைவு மற்றும் ஈடுபாடு போன்றவற்றினூடாக இந்நிகழ்வு மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. இந்த விளையாட்டு தினத்தினூடாக, அணி அங்கத்தவர்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் நட்புணர்வு மேம்படுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதில் முழு மூச்சுடன் செயலாற்றியிருந்ததனூடாக, வெற்றியீட்டும் நிறுவனம் என்பது மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.” என்றார்.
இந்த குதூகலமான நிகழ்வில் அனைத்து ஊழியர்களையும் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டிருந்தனர். பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (DE&I) ஆகியவற்றை உணர்த்துவதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. பயில்வதற்கும் வளர்ச்சிக்கும் வாய்ப்புகளை வழங்குவது, தொழில்நிலை வெற்றியை ஊக்குவிப்பது மற்றும் பொதுவான இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயலாற்றுவது போன்றவற்றுக்கான பணிக் கலாசாரத்தை வலுவூட்டுவதற்கான நற்பெயரை யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றுக் கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
3 hours ago