2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் மிகவும் புத்தாக்கமான டிஜிட்டல் காப்புறுதி நிறுவனமாக கௌரவிப்பு

S.Sekar   / 2021 மார்ச் 18 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மிகவும் புத்தாக்கமான டிஜிட்டல் காப்புறுதி நிறுவனமாகவும் 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் மிகவும் புத்தாக்கமான டிஜிட்டல் செயற்திட்ட முன்னெடுப்பாளராகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் கௌரவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற வியாபார மற்றும் நிதியியல் சஞ்சிகையான இன்டர்நஷனல் பிஸ்னஸ் சஞ்சிகையினால் இந்த கௌரவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் பல்வேறு செயற்திட்டங்களை பிரதிபலிப்பதாக இந்த விருதுகள் அமைந்திருப்பதுடன், செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது, ஆற்றல் திறனை கட்டியெழுப்புவது மற்றும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை பின்பற்றுவது போன்ற பரிபூரண மாற்றியமைப்பு பயணத்தை காப்புறுதித் துறையில் முன்னெடுக்கின்றமையை கௌரவித்தும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விசேட சாதனை தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “நவீன தொழில்நுட்பத்தில் எமது தொடர்ச்சியான முதலீடுகள் ஊடாக தற்போது பயன் கிடைக்க ஆரம்பித்துள்ளன. டிஜிட்டல் செயற்பாட்டு மாதிரிக்கு எமது மாற்றம் என்பது துரித கதியில் அமைந்திருந்ததுடன், தமது இருப்பிடங்களிலிருந்து பணியாற்றும் 500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருந்ததுடன், யூனியன் அஷ்யூரன்சினால் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒன்லைன் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.” என்றார்.

தமது தயாரிப்புகளை கண்டறிவது, சேவையாற்றும் ஆற்றல் மற்றும் சந்தையில் விநியோகம் போன்ற நடவடிக்கைகளில் இலங்கை முன்னேற்றத்தைப் பதிவு செய்து வரும் நிலையில், யூனியன் அஷ்யூரன்ஸ் வழமையான செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று, புத்தாக்கமாக செயலாற்றி, தொழில்நுட்ப ரீதியில் திறன் வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கிடையில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்து செயலாற்றுகின்றது. டிஜிட்டல் ரீதியில் மேம்படுத்தப்பட்ட, வாடிக்கையாளரை அடிப்படையாகக் கொண்ட ஆயுள் காப்புறுதி நிறுவனம் எனும் வகையில், தொழில்நுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட தயாரிப்புகள், சேவைகள் மற்றும் கட்டமைப்புகளினூடாக யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கை சந்தையில் முன்னணியில் திகழ்வதுடன், தமது வாடிக்கையாளர்களுக்கு நிதி இலக்குகளை எய்துவதற்கு உதவுவதுடன், சௌகரியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை முன்னெடுக்க உதவுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .