Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காப்புறுதி ஆலோசகர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறந்த வெகுமதிகள் மற்றும் கௌரவிப்புத் திட்டமான – யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக விளக்கமளித்திருந்தார்.
1. யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் என்றால் என்ன?
யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் என்பது உலகத் தரம் வாய்ந்த வெகுமதித் திட்டமாக அமைந்திருப்பதுடன், சிறந்த விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைத்திறனை வெளிப்படுத்தியிருந்த நிறுவனத்தின் முன்னணி காப்புறுதி ஆலோசகர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எமது விற்பனை செயலணியை கௌரவித்து வெகுமதியளிக்கும் வகையிலமைந்த கட்டமைப்பாக இது அமைந்திருப்பதுடன், சிறப்பை நோக்கி இயங்கும் பலரை ஊக்குவிக்கும் திட்டமாகவும் அமைந்துள்ளது.
2. யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப்பின் பிரத்தியேகத் தன்மை யாது?
எமது ஆலோசகர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் என்பது துறையின் முன்னோடியான வெகுமதி மற்றும் கௌரவிப்புத் திட்டமாக அமைந்துள்ளது. சிறப்பாக செயலாற்றும் காப்புறுதி ஆலோசகர்களுக்கு சொகுசான வாழ்க்கைமுறை வெகுமதிகளை வழங்கி கௌரவிக்கும் ஒரே திட்டமாக அமைந்துள்ளது. இதில் சொகுசு மோட்டார் கார்கள், வியாபார அபிவிருத்தி வெகுமதிகள் மற்றும் கௌரவிப்பு வெகுமதிகள் போன்ற பலதும் அடங்கியுள்ளன.
இந்த நிகழ்ச்சியினூடாக, கழக அங்கத்தவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி போன்றன வழங்கப்படுவதுடன், தொடர்ச்சியாக சேவை விநியோகம் மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவு போன்றவற்றை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. துறையில் எமது விற்பனை செயலணியினரை முன்மாதிரியானவர்களாக தயார்ப்படுத்துவது என்பதனூடாக, துறையில் ஒப்பற்ற சேவை அனுபவத்தை எமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது.
3. அவ்வாறானதொரு நிகழ்ச்சித் திட்டத்தை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏன் ஆரம்பித்தது?
எமது காப்புறுதி ஆலோசகர்கள் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதுடன், பாரிய சொத்தாக அமைந்துள்ளனர். யூனியன் அஷ்யூரன்ஸின் முகப்பாக இவர்கள் திகழ்கின்றனர். நிறுவனம் எனும் வகையில், எமது கூட்டாண்மை இலக்குகளில் வாடிக்கையாளர் சேவை மற்றும் தன்னிறைவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளித்துள்ளோம். எனவே, மிகவும் முக்கியமான வாடிக்கையாளர் தொடுகைப்பகுதியான எமது விற்பனை ஆலோசகர்களை துறையின் சிறந்தவர்களாக மேம்படுத்த வேண்டியது எமக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. அதன் காரணமாக இந்த நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4. எமது வாடிக்கையாளர்கள் எவ்வாறு அனுகூலம் பெற முடியும்?
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்கு என்பது எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வை வழங்கும் சேவை அனுபவத்தைக் கொண்ட காப்புறுதி விற்பனை செயலணியைக் கட்டியெழுப்புவதாகும். நிறுவனம் எனும் வகையில் நாம் எப்போதும், ஆயுள் காப்புறுதி தீர்வை கொள்வனவு செய்வதிலும், அனுகூலங்களைப் பெறுவதிலும் வாடிக்கையாளர் அனுபவத்தில் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துகிறோம். இந்தத் திட்டம் துறையில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், எமது வாடிக்கையாளர் சேவை இலக்குகளை எய்துவதற்காக விற்பனை செயலணியினருக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கையாக அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
48 minute ago
52 minute ago
57 minute ago