Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
S.Sekar / 2023 ஜனவரி 09 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், அதன் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக, செனத் ஜயதிலகவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு முன்னர், நிறுவனத்தின் பிரதம விநியோக அதிகாரியாக இவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டில் ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து கொண்டதுடன், 2019 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, ஜோன் கீல்ஸ் லொஜிஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியிருந்தார். ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சிரேஷ்ட உப தலைவராக இவர் திகழ்வதுடன், பதினைந்து வருடங்களுக்கு மேலாக, கூட்டாண்மை முகாமைத்துவ அனுபவத்தை இவர் தம்வசம் கொண்டுள்ளார். நொட்டிங்ஹம் (UK) பல்கலைகழகத்தின் நிதியியல் மற்றும் கணக்கீடு ஆகியவற்றில் முதுமாணிப் பட்டத்தை இவர் கொண்டுள்ளதுடன், முகாமைத்துவ கணக்கீட்டு பட்டையக் கல்வியகத்தின் அங்கத்துவத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டத்தையும் கொண்டுள்ளார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “செனத் தம் வசம் உறுதியான அனுபவத்தையும், ஆற்றலையும் கொண்டுள்ளதுடன், நிறுவனத்துக்கு பெறுமதியான பங்களிப்பையும் வழங்கக்கூடியவர். புதிய பதவியில் அவர் சிறப்பாக செயலாற்றுவதற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தலைமைத்துவ நியமனத்துடன், நிறுவனத்தினால் அதன் வளர்ச்சியை நோக்கி துரிதமாக நகரக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எதிர்வரும் ஆண்டில் மேலும் சிறந்த சாதனைகளை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் கருதுகின்றோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago